பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானிடவியல் தீ உண்டாக்கும் அமெரிக்க இந்தியர்கள் மக்களின் நாகரிகம், பழக்கவழக்கங் கள், வாழ்க்கை முறை, திருமணம், குடும் பம், வீடுகளின் அமைப்பு, ஆடை அணி கலன்கள், உணவு, ஆயுதங்கள், இசை, நடனம், கலைகள், கைத்தொழில்கள், சமயம், வழிபாட்டு முறை, சமூக அமைப்பு, அரசியல் அமைப்புகள், சட்ட திட்டங்கள் முதலியவற்றின் வளர்ச்சி குறித்து ஆராய்வதைச் சமூக மானிட வியல் (Social Anthropology) என்பார்கள். இதைச் சமூகவியல் (Sociology) என்றும் கூறுவர். பண்டைக்கால மக்கள் விட்டுச்சென்ற நினைவுச்சின்னங்களை அகழ்ந்தெடுத்து, அவற்றை ஆராய்ந்து மனித வரலாற்றை யும் பண்பாட்டையும் விளக்குவது தொல் பொருளியல் (த.க.) எனப்படும். தென் அமெரிக்க மீனவர் குடும்பமும் படகுகளும் 8. - மாஸ்க்கோ மாஸ்க்கோ : சோவியத் ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்க்கோ . உலகிலுள்ள மிகப் பெரிய நகரங்களில் இது ஒன்று. இங்கு 50 லட்சம் மக்களுக்குமேல் வாழ்கிறார் கள். வால்கா ஆற்றின் துணையாறான மாஸ்க்கோ ஆற்றின் கரையிலிருக்கும் இந் நகரம், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு கிராமமாகத்தான் இருந்தது. ஆற்றின் மூலம் நடந்த வாணிகத்தின் விளைவாக இது படிப்படியாக வளர்ச்சி யடைந்து முக்கியமான வாணிகத் தலமாக மாறியது. வெளிநாட்டினர் படை யெடுத்து ரஷ்யாவின் தெற்கு, கிழக்குப் பகுதிகளை வசப்படுத்திக் கொண்டபோது, பலர் மாஸ்கோவுக்குத் தப்பியோடி அங்குக் குடியேறினர். நாளடைவில் மாஸ்க்கோ பெரிய நகரமாயிற்று. 1533-ல் ரஷ்யப் பேரரசு நிறுவப்பட்டபோது மாஸ்க்கோ அதன் தலைநகரமாகியது. 1712-ல் பீட்டர் என்ற அரசர், இப்போது லெனின்கிராடு என்று அழைக்கப்படும் பீட்டர்ஸ்பர்கு நகருக்குத் தலைநகரை மாற்றினார். ஆனால் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சிக்குப்பின் 1918-ல் மாஸ்க்கோ மீண்டும் ரஷ்யாவின் தலைநகராயிற்று.

தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் மாஸ்க்கோ . ரஷ்ய நாட்டின் முக்கியத் தொழிற்சாலைகள் யாவும் இங்குதான் உள்ளன. போக்குவரத்து வசதிகளும் இங்கு சிறந்து விளங்குகின்றன. இந் நகரம் பல கால்வாய்களால் ஆறுகளுடன் இணைக் கப்பட்டுள்ளது. அதனால் வடக்கிலுள்ள பால்ட்டிக் கடல், வெண்கடல் ஆகியவற்றி லிருந்தும் தெற்கிலுள்ள காஸ்ப்பியன் கடல், கருங்கடல் ஆகியவற்றிலிருந்தும் கப்பல்கள் மூலம் இந் நகருக்குச் செல்ல முடியும். இங்கிருந்து ரஷ்யாவின் எல்லாப் பகுதிகளுக்கும் ரெயில், சாலைப் போக்கு வரத்து வசதிகள் உள்ளன. மாஸ்க்கோ வில் அமைக்கப்பட்டுள்ள 'மெட்ரோ' என்னும் தரையடி ரெயில் பாதை உலகப் புகழ் பெற்றது. மூன்று பெரிய விமான நிலையங்கள் இந் நகரில் உள்ளன.

மாஸ்க்கோ நகரின் மையமாக விளங் வது கிரெம்லின் மாளிகைகளாகும். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இம் மாளிகைகள் சிற்பக்கலைச் சிறப்புடையவை. இம் மாளிகைகளைச் சுற்றிப் பெரிய கோட்டை மதில்கள் உள்ளன. இம் மாளிகைகளில் இப்போது சோவியத் அரசாங்க அலுவலகங்கள் இருக்கின்றன. கிரெம்லின் மாளிகைகளுக்கு அருகில் செஞ் சதுக்கம் என்னும் பெரிய திடல் உள்ளது. இங்குதான் அரசாங்க விழாக்களும் அணிவகுப்புகளும் நடைபெறும்.