பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானிடா களையே அடிப்படையாகக் கொண்டிருக் கின்றன. குழந்தைகளின் மொழியறிவை வளர்ப்பதற்காக இங்குக் கதைகளுக்கும் பாட்டுகளுக்கும் சிறப்பிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த முறையை புரொபெல் (Froebel) என்ற ஜெர்மானியர் 1839-ல் வகுத்தார். மானிடவியல் (Anthropology): மனிதன் முதன் முதலில் எங்கே எப்பொழுது தோன்றினான்? எவ்வாறு தோன்றினான்? உலகில் எத்தனை மனித இனங்கள் உள்ளன? அவ்வினங்களிடையே காணப் படும் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணம் என்ன? இவை பற்றியெல்லாம் ஆராய்ந்தறிவது சுவையான ஓர் அறிவிய லாகும். இத்தகைய ஆராய்ச்சித் துறையை மானிடவியல் என்பார்கள். மனிதன் தோன்றியது முதல் இன்று வரையுள்ள மனித வரலாற்றை மானிட வியல் ஆராய்கிறது. உலகில் மக்கள் பரவியுள்ள வகை, அவர்களின் நாகரிக வளர்ச்சி பற்றியும் இது விளக்குகிறது. உலகின் பல பகுதிகளில் ஆதிக்குடிகள் (த.க.) வாழ்ந்துவருகிறார்கள். அவர் களின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றி யும் மானிடவியல் ஆராய்கிறது. ஆதி காலம் முதல் இன்று வரையிலும் காலந் தோறும் மக்களின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், சிந்தனைகளும் எவ்வாறு மாறிவந்திருக்கின்றன என்பதையும் இத் துறை விவரிக்கிறது. இவை குறித்து வரலாற்றுத் துறையும் ஆராய்கிறது. எனினும், வரலாற்றுக்கும் மானிடவியலுக்கும் வேறுபாடு உண்டு. மனித வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி கள் குறித்து மானிடவியல் அக்கறை கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, ஆதிக் குடிகள் யாராவது தேங்காயைப் பண மாகப் பயன்படுத்தினார்கள் என்றால், அது மானிடவியல் அறிஞர்களுக்கு ஆர்வத் பல்வேறு இன மக்களிடையே உ காணப்படுகின்றன. தோல், கன மண்டையின் வடிவம் முதலியவற்றில் வியல் 11 தைத் தூண்டும் செய்தியாகும்; வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு அது அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால், அந்த முறையை முதன் முதலில் புகுத்திய மன்னன் பெயர் என்ன, எந்த ஆண்டில் புகுத்தினான் என்ற விவரம் கிடைத்தால், அது வரலாற்று ஆராய்ச்சியாளருக்கு முக்கியமான செய்தி. மானிடவியல் மிகவும் விரிவானதொரு துறையாகும். இதில் பல பிரிவுகள் உள்ளன. உலகிலுள்ள பல்வேறு இன மக்களின் வரலாறுகளை ஆராய்வது மானிட வகையியல் (Ethnology) எனப்படும். பண்டைய மக்களுக்கு எழுதவோ படிக் கவோ தெரியாது. எனவே, அவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் எதுவும் இருக் காது. எனினும் அவர்களிடம் வாய்மொழி வாயிலாக வழங்கிவந்த புராண, இதி காசக் கதைகளைக் கொண்டு அவர்களின் வரலாற்றை ஆராயலாம். உலகெங்குமுள்ள மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசியும் எழுதியும் வருகிறார் கள். இம் மொழிகளின் தோற்றம், வளர்ச்சி குறித்தும், அம் மொழிகளுக் கிடையிலான உறவுகள் பற்றியும் ஆராய் வது மொழியியல் (Philology) எனப்படும். பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒருவகைக் குரங்கிலிருந்து மனிதன் உண்டானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வாறு தோன்றிய மனிதனின் உடலமைப்பு, குண இயல்பு கள், அறிவாற்றல் இவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி நிலைகளைப் பற்றி ஆராய்ந்து அறிவது பௌதிக மானிடவியல் (Physical Anthropology) என்பதாகும். பல்வேறு இன மக்களிடையே உடல் அமைப்பில் சிலவகை வேறுபாடுகள் காணப்படுகின்றன. மண்டையின் வடிவம், தோல், கண், தலை மயிர் இவற்றின் நிறம், இரத்தத்தின் வகை ஆகியவற்றில் இவ்வேறுபாடுகளைக் காணலாம். இவை பற்றியெல்லாம் ஆராய் வது இப் பிரிவில் அடங்கும். டலமைப்பில் சில வேறுபாடுகள் ன், தலைமயிர் - இவற்றின் நிறம், இந்த வேறுபாடுகளைக் காணலாம்.