பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான்-மா புள்ளிமானும் அதன் குட்டியும் மான் கொம்புகள் அழகானவை. ஆண் மானுக்கு மட்டுமே கொம்பு உண்டு. ஆனால் பனிமான், காரிபோ இனங்களில் ஆண், பெண் ஆகிய இரண்டிற்குமே கொம்பு உண்டு. கஸ்தூரிமான், சீனத்து நீர்மான் என்ற இனங்களுக்குக் கொம்பு இல்லை. மானின் கொம்புகள், ஆடு மாடு ஆகியவற்றின் கொம்பு போன்று நிலைத்து இருப்பன அல்ல. ஒவ்வோராண்டும் இவை உதிர்ந்து மீண்டும் முளைக்கும். ஒவ்வொரு முறையும் கொம்பு முளைக்கும்போது அதற் குப் புதிய கிளைகள் தோன்றும். முழு வளர்ச்சியடைந்த மானின் கொம்புகளில் பல கிளைகள் இருக்கும். மான் முதுமை அடையுங் காலத்தில் கொம்புகளின் வளர்ச்சியும் குறையும். மான் இனங்களில் மிகவும் அழகானது புள்ளிமான். இந்தியாவிலும் இலங்கையி லும் மட்டுமே இது வாழ்கிறது. இதன் நிறம் செம்பழுப்பு. உடலில் வெண்மை யான புள்ளிகள் பல வரிசையில் அமைந் திருக்கும். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். காச்மீரம், சிக்கிம் ஆகிய மலைப் பகுதிகளில் கஸ்தூரிமான் அதிகம். இம் மானின் அடிவயிற்றுக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து கஸ்தூரி எனும் வாசனைப் பொருள் கிடைக்கிறது. வட துருவப் பகுதிகளில் பனிமான்கள் அதிகம். அப் பகுதியில் வாழும் மக்களுக்கு இவை பெரிதும் உதவுகின்றன. அவர் களுடைய ஸ்லெட்ஜ் (Sledge) என்னும் சறுக்கு வண்டியைப் பனிக்கட்டியின் மீது இவை இழுத்துச் செல்லும்; பொதி சுமக் கும். இவற்றின் பாலும் இறைச்சியும் அவர்களுக்கு உணவாகின்றன. இவற்றின் ன்டிசோரி தோலை ஆடையாக உடுத்துகின்றனர்; கூடாரம் அமைக்கவும் தோல் பயன்படு கிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மான்களுக் கான புகலிடம் ஒன்று உள்ளது. மான்கள் கூட்டங் கூட்டமாகத் திரிவதை இங்கே கண்டு களிக்கலாம். மான்டிசோரி முறை : ஐந்து வயதிற் குட்பட்ட உங்கள் தம்பி தங்கைகளும் இன்று குழந்தைகளுக்கான பள்ளிகளுக்குச் செல்கிறார்கள் அல்லவா? குழந்தைகளுக் கான பள்ளிகளில் மான்டிசோரிப் பள்ளிகள் ஒருவகை. 1907-ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மான்டிசோரி அம்மையாரால் (Maria Montessori, 1870-1952) இம்முறை வகுக்கப்பட்டது. உலகில் பல நாடுகளில் மான்டிசோரி முறைப் பள்ளிகள் உள்ளன. விளையாட்டு மூலமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கொள் கையே இதன் அடிப்படையாகும். சிறு குழந்தைகளும் ஒழுக்கம், கட்டுப் பாடு, பொறுப்புணர்ச்சி முதலியவற்றை உணர்ந்து கொள்ள வழிசெய்கிறது மான்டிசோரி முறை. தம் விருப்பம்போல் நடமாடவும், பிறருக்குத் தீங்கு செய் யாதவகையில் தமக்குப் பிடித்தமான செயலில் ஈடுபடவும் மான்டிசோரிப் பள்ளி களில் குழந்தைகளுக்குச் சுதந்தரம் உண்டு. பல குழந்தைகள் சேர்ந்து கூட்டுறவு மனப் பான்மையை இங்கு பெறுகின்றன. பல குழந்தைகளுக்கிடையில் ஒவ்வொரு குழந் தையும் தனக்குத் தானே ஆசிரியராக விளங்குகிறது. மான்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், கண் காணிக்கவுமே ஆசிரியர்கள் இருப்பார்கள். மான்டிசோரிப் பள்ளிகளில் பலவகைப் பயிற்சிக் கருவிகள் உள்ளன. இவை யாவும் உளவியலை (த.க.) அடிப்படையாகக் கொண்டவை. இக் கருவிகள் விளையாட்டுச் சாமான்கள் போலக் கண்ணைக்கவரும் வகையில் பல வண்ணங்களில் இருக்கும். இக் கருவிகளின் மூலம் ஆசிரியரின் உதவி இல்லாமலேயே குழந்தைகள் பலவற்றைக் கற்று உணர்ந்துகொள்ள முடியும். பிற் காலத்தில் எழுதவும், படிக்கவும், பாட வும், வரையவும் கற்றுக்கொள்வதற்கான பயிற்சியைக் குழந்தைகள் இக் கருவிகளின் வாயிலாகப் பெற்றுவிடுகின்றன. கணிதம், பூகோளம், உயிரியல் முதலிய பல துறை களுக்கேற்றவாறு பலவகைக் கருவிகள் இம் முறையில் உள்ளன. கிண்ட ர்கார்ட்ட ன் (Kindergarten) என்ற மற்றொரு வகைக் குழந்தைப் பள்ளி களும் உள்ளன. இப் பள்ளிகளில் பாட முறைகள் குழந்தைகளின் விளையாட்டு