பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மா அனுப்பப்பட்டபோதிலும் வரலாறு, தத்துவம் இவற்றைக் கற்பதிலேயே இவர் ஆர்வங் கொண்டிருந்தார். பான் பல்கலைக் கழகத்திலும், பெர்லின் பல்கலைக்கழகத் திலும் இவர் கல்வி கற்றுப் பிறகு பத்திரிகை ஆசிரியரானார். பாரிஸில் சோஷலிச இயக்கம் பரவியிருந்தபோது அங்கு இவர் சென்றார். எங்கெல்ஸ் (Engels) என்பவரைக் கண்டு அவருடன் நட்புக் கொண்டார். இந் நட்பு இவரது வாழ் நாள் முழுவதும் நீடித்தது. இருவரும் லண்டன் சென்று, புகழ்பெற்ற பொது வுடைமை அறிக்கையை 1848-ல் தயாரித்தனர். காரல் ஜெர்மனியில் கோலோன் நகரில் சிறிது காலம் பத்திரிகை ஆசிரியராக இருந்தபின் 1849-ல் மீண்டும் லண்டன் சென்று தம் வாழ்நாளைக் கழித்தார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் 'மூலதனம்' (Das Kapital) என்ற நூல் இவருக்குப் புகழ் தேடித்தந்தது. மக்களின் அரசியலும், சமூக அமைப்பும் அவர்களுடைய பொருளாதார வாழ்க்கை யைப் பொறுத்திருக்கின்றன. எனவே ஒரு நாட்டின் அரசியலை அறிந்துகொள்ள மக்களின் பொருளாதார வாழ்க்கையை ஆராய வேண்டும். பொருளாதார சூழ் நிலைக்கேற்ப மக்களிடையே வகுப்பு வேற்றுமை உண்டாகிறது. பின்னர் இவ் வகுப்பினருள் ஒரு பிரிவினர் மற்றவர் மீது ஆதிக்கம் பெற முயல்கின்றனர். நாளடை வில் தொழிலாளர்களுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டதும் அவர்களுடைய அதிகாரம் மேலோங்கி முதலாளித்துவம் மறைந்துவிடும். பின்பு சோஷலிச சமூகம் அமையும். இதுவே மார்க்ஸ் கொள்கை யாகும். இக் கருத்துகளை இவர் சளைக்கா மல் பரப்பிவந்தார். இவரது சீடர்களில் குறிப்பிடத்தக்கவர் 'சோவியத் யூனியனின் தந்தை ' எனப் புகழப்படும் லெனின் (த.க.) ஆவார். காரல் மார்க்ஸ் கொள்கையில் பல குறைகள் உள்ளன என்று கூறும் அறிஞர் களும் உண்டு. இவரது கொள்கை இன்று சோவியத் ரஷ்யாவிலும் சீனாவிலும் மற்றும் பல பொதுவுடைமை நாடுகளி லும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மான் : நீண்ட கொம்புகளைடைய அழகிய மான்களை நீங்கள் பார்த்திருப்பீர் கள். உலகின் பல பகுதிகளில் மான்கள் வாழ்கின்றன. மான்களில் பலவகை உண்டு. வட அமெரிக்காவில் வாழும் மூஸ் (Moose) என்ற இனமே மான்களில் பெரியது. இது சுமார் இரண்டு மீட்டர் உயரமிருக்கும். பன் சென்னை, சிறுவர் பூங்காவிலுள்ள மான் சிலி நாட்டில் வாழும் ஒருவகை மான் மிகச் சிறியது. இது 30 சென்டிமீட்டர் உயரமே உள்ளது. காரிபோ (Caribou), பனிமான் (Reindeer), செம்மான் (Red deer), வாபிதி (Wapiti), கடமை , பாராசிருங்கம், புள்ளிமான், கஸ்தூரிமான், குரை மான் முதலியன மற்ற முக்கிய இனங் கள். மான்கள் கூட்டங் கூட்டமாக வாழும் இயல்புடையவை. ஆடு மாடு போன்று மானும் அசை போடும் விலங்காகும். புல் , இளந்தளிர், இலை, தழை முதலியன மானின் உணவு. மானுக்கு மோப்ப சக்தியும் கேட்கும் ஆற்றலும் அதிகம். பகை விலங்குகள் தொலைவில் வரும்போதே அதைத் தெரிந்துகொண்டு, துள்ளியோடி மறைந்து விடும். வேகமாக ஓடுவதற்கு ஏற்ப இதன் கால்கள் நீளமாகவும் உறுதியாகவும் உள்ளன. பனிமான்கள்