பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயா நாகரிகம் பஞ்ச பாண்டவர் இரதங்கள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப் பட்டனவாம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கலங் கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கலங்கரை விளக் கம் ஒன்று இப்போது இயங்கிவருகிறது. புகழ்பெற்ற இச் சிற்பங்களைக் காணவரும் உல்லாசப் பயணிகளுக்காக இங்குப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாயா நாகரிகம் : அமெரிக்காவின் பழங்குடி மக்களுக்கு அமெரிக்க இந்தியர் கள் (த.க.) என்று பெயர். அவர்களில் ஓர் இனத்தவர் மாயா மக்கள். தென் அமெரிக்காவில் சுமார் 1,500 ஆண்டு களுக்கு முன்பு இவர்கள் வாழ்ந்து வந்த னர். இன்று குவாட்டெமாலா, ஹாண்டு ராஸ், மெக்சிக்கோ ஆகிய நாடுகள் இருக் கும் பகுதியில் மாயா மக்கள் வாழ்ந்தனர். இங்கு தோன்றிய நாகரிகங்களுள் மாயா மக்களின் நாகரிகம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. இதுவே பின்பு தோன்றிய ஆஸ்ட்டெக் (த.க.), இன்கா (த.க.) முதலிய நாகரிகங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. மாயா மக்கள் கற்களைக் கொண்டு பல பெரிய கோயில்களைக் கட் டினர். இவை மிகவும் உயரமானவை. மாயா மக்களுடைய முக்கியத் தொழில் சோளம் பயிரிடுதல், வேட்டையாடுதல், தேனீ வளர்த்தல் முதலியன. அவர்கள் அமைத்த கல் தூண்களில் சித்திர எழுத்து கள் உள்ளன. வானவியலிலும், கணிதத் திலும், சித்திரம் வரைவதிலும் இவர்கள் சிறந்து விளங்கினர். அழகிய மட்பாண்டங் களைச் செய்யவும், துணி நெய்யவும், தங்கம் வெள்ளியினால் அணிகலன்களைச் செய்யவும் இவர்கள் அறிந்திருந்தனர். - மார்க்ஸ் மழை, கலை முதலியவற்றிற்கு உரிய கடவுளரை வணங்கிவந்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு ஸ்பானி யர் படையெடுப்பால் மாயா மக்களின் நாகரிகம் படிப்படியாகச் சிதைந்தது. சிறப் புற்று விளங்கிய நகரங்கள் காடுகளுக் கிடையில் மறைந்தும் புதைந்தும் தொல் பொருள்களாகிவிட்டன. இவை இன்று அவர்களுடைய நாகரிகத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. மாயா மக்களின் வழிவந்தவர்களில் சிலர் இன்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். மார்க்கோ போலோ (Marco Polo, 1254-1324) : புகழ்பெற்ற இத்தாலிய யாத்திரிகர் மார்க்கோ போலோ. சீனப் பேரரசைப் பற்றியும் பிற கிழக்கு நாடு களைப் பற்றியும் பல விவரங்களை முதன் முதலில் உலகுக்கு உணர்த்தியவர் இவர். பார்க்க : போலோ, மார்க்கோ. மார்க்ஸ் , காரல் (Karl Marx, 1818 - 1883) : நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் பொதுவுடைமையாக இருக்கவேண்டும் என்பது கம்யூனிசம் என்னும் பொருளா தாரக் கொள்கையாகும். பொதுவுடைமை (த.க.) என்னும் இக் கொள்கையை வகுத் தவர் காரல் மார்க்ஸ். இவர் மேற்கு ஜெர்மனியில் 1818-ல் பிறந்தார். இவரது தாய் தந்தையர் யூதர் கள். பின்பு அவர்கள் கிறிஸ்தவ சமயத் தில் சேர்ந்தனர். காரல் மார்க்ஸ் சட்டப் படிப்புக்காக பான் பல்கலைக்கழகத்திற்கு காரல் மார்க்ஸ்