பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக மண்டபம் மகிஷமர்த்தினி மண்டபத்தினுள்.. தாகச் செதுக்கி வைத்துள்ளனர். கணேசர் இரதம், பிடாரி இரதங்கள் என்பனவும் இவ்வகையைச் சேர்ந்தவையாகும். இரண்டாவது, குகைக் கோயில்கள். ஊரின் நடுவே உள்ள மலையைக் குடைந்து இக் குகைக் கோயில்கள் அமைக்கப்பட் டுள்ளன. இன்று இவற்றுக்கு துர்க்கைக் கோயில், தர்மராஜ மண்டபம், மகிஷ மர்த்தினி மண்டபம், வராக மண்டபம், இராமானுச மண்டபம், திரிமூர்த்தி குகைக் கோயில், ஆதிவராகர் குகைக் கோயில் என்று பெயர்கள் உள்ளன. வாயில்களில் துவாரபாலகர்கள் நிற்கின்ற னர். சுவர்களில், பல புராணக் காட்சி களைச் சித்தரிக்கும் அழகிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மகிஷமர்த்தினி மண்டபத்தில், அசுரனை துர்க்கை கொல்லப் போகும் காட்சி அற்புதமானது. மற்ற அருச்சுனன் தவம் கடற்கரைக் கோயில் | ஆண், பெண் தெய்வ உருவங்களும் மிக அழகாக இருக்கின்றன. மூன்றாவது, தொகுப்புச் சிற்பங்கள். இவை பரந்த குன்று முகப்புகளில் செதுக்கப்பட்ட பெரிய புடைப்புச் சிற்பங்க ளாகும். இவற்றுள் ஒன்று, அருச்சுனன் தவமிருக்கும் காட்சி. அழகான இச் சிற்பம், உலகின் மிகப் பெரிய சிற்பங் களுள் ஒன்றாக உள்ளது. கண்ணன், கோவர்த்தன கிரியைத் தூக்கிக் கோகுலத் தைக் காப்பாற்றிய காட்சி, மற்றொரு குன்றில் செதுக்கப்பட்டுள்ளது. நான்காவது, கருங்கற்களால் கட்டப் பட்ட கட்டுமானக் கோயில்கள். கடற் கரைக் கோயில் இவற்றுள் முக்கியமானது. இதுபோன்று ஏழு கோயில்கள் கட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது ஒன்றே இப்போது இருக்கிறது. மற்றவை