பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசக பிறகு சுமார் ஐந்து மாதங்கள் பல இன்னல்களுக்கு இடையே பயணம் செய்து இவர் பிலிப்பீன் தீவுகளை அடைந்தார். இங்கு மஜல்லன் சில நாட்கள் தங்கினார். இவருடைய ஆட்களுக்கும் தீவு மக்களுக்கு மிடையே ஏற்பட்ட போரில் மஜல்லனும், இவருடைய ஆட்களில் பலரும் இறந்த னர். பின்னர் எஞ்சிய சிலரே ஒரு கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து 1522ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஸ்பெயினை அடைந்தனர். மாணிக்கவாசகர் : மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் (த.க.), சுந்தரமூர்த்தி சுவாமிகள் (த.க.), திருநாவுக்கரசர் (த.க.) ஆகியோரை 'நால்வர்' என்றும் 'சைவ சமயாசாரியர்கள்' என்றும் கூறுவர். மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். பாண்டிய மன்னனுக்கு அமைச்சரானார். ஆனால் இவர் மனம் சிவ பெருமான் திருப்பணியிலேயே ஈடுபட்டது. அதனால் பன்முறை பாண்டியனது கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. சிறிது காலம் இன்னல்களை அனுபவித்த பின் இவர் தவக்கோலம் பூண்டார். பல தலங்களுக்குச் சென்று வணங்கிய பின்பு தில்லையை அடைந்தார். அங்கு திரு வாசகத்தையும், திருக்கோவையாரையும் பாடினார். மாணிக்கவாசகர் தமது 32ஆம் வயதில் மறைந்தார். மாணிக்கவாசகர் 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று மாணிக்கவாசகர் திருத்துறைப்பூண்டியிலுள்ள சிலை ர் - மாமல்லபுரம் சிலரும், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என வேறு சிலரும் கூறுவர். திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத் துகள் அடங்கியுள்ளன. இவ்வினிய பக்திப் பாடல்கள் நம் உள்ளத்தை ஈர்ப்பவை. 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று கூறுவதி லிருந்து இதன் சிறப்பு விளங்கும். திரு வாசகத்தில் உள்ள திருவெம்பாவைப் பதிகம் மார்கழித் திங்களில் அதிகாலையில் பக்தியோடும் இசையோடும் பாடப்பெறு கிறது. மாமல்லபுரம் : உலகப் புகழ் பெற்ற சிற்பங்களுள்ள மாமல்லபுரத்திற்குச் சென் றிருக்கிறீர்களா? தமிழ் நாட்டின் சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவை இங்குள்ள சிற்பங்களாகும். சென்னைக்குத் தெற்கில் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரமாக மாமல்லபுரம் உள்ளது. இதனை மகாபலி புரம் என்றும் சொல்வர். தமிழகத்தில் சிறப்புடன் ஆண்ட பல்லவ அரசர்களின் முக்கியத் துறைமுகப் பட்டினமாக முற்காலத்தில் மாமல்லபுரம் விளங்கியது. மாமல்லன் என்று பெயர் பூண்ட முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668) என்ற பல்லவ அரசர் காலத் தில் இந் நகரம் பெருஞ் சிறப்படைந்திருந் தது. அதனால் இதற்கு மாமல்லபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. சாசனங் களிலும் நூல்களிலும் சுருக்கமாக 'மல்லை' என இந் நகரம் குறிப்பிடப் பெறுகிறது மாமல்லனின் தந்தை காலத்திலேயே இங்குச் சிற்ப வேலைகள் தொடங்கப் பெற் றன. எனினும் மாமல்லனே இவற்றில் மிகுந்த ஆர்வங்கொண்டு பல சிற்பங்களைச் செய்வித்தார். அவருக்குப் பிறகு அரசாண்டவர்களும் இப்பணியைத் தொடர்ந்து நிறைவேற்றினர். மாமல்லபுரச் சிற்பங்கள் நான்கு வகை யாக உள்ளன. இரதங்கள் என்று அழைக் கப்படும் சிற்பங்கள் ஒருவகை. இவை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிறு சிறு கோயில் களாகும். சிறு குன்றுகளைக் கோயில் வடிவில் செதுக்கி உள்ளேயும் குடைந்து இவற்றை அமைத்துள்ளனர். இவற்றுள் பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்பவை குறிப்பிடத்தக்கவை. திரௌபதி, தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரின் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் கோபு ரங்கள், தூண்கள், சுவர்கள் முதலியவை அழகிய சிற்பவேலைப்பாடுகள் நிறைந்தவை. இந்த இரதங்களுக்கு அருகில் யானை, சிங்கம் ஆகிய விலங்குகளின் உருவங்களைப் பெரி