பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஜல் பகிர்ந்து செய்ய வேண்டும். குடும்ப உறுப் பினர்களுக்கிடையிலும், குடும்பத்தினருக் கும் சமுதாய மக்களுக்கிடையிலும் நல் லுறவை ஏற்படுத்தவும் திறமை வேண் டும். குடும்ப உறுப்பினர்கள், விருந்தினர் கள் ஆகியோரின் தனிவசதிகளுக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். முதியவர் களையும், நோயாளிகளையும் தனி அக்கறை யுடன் கவனித்தல் வேண்டும். குடும்பத்தின் வருவாய்க்குத் தக்கபடி வீட்டுச் செலவுகளைத் திட்டமிடுவது மிக முக்கியம். வீட்டு வாடகை, மின்சாரக் கட் டணம், எரிபொருள், உணவுப்பொருள் கள், துணிகள் முதலியவற்றுக்குப் போதிய அளவு பணம் ஒதுக்கவேண்டும். வீட்டுக் குத் தேவையான உணவுப் பொருள்கள், கருவிகள், பாத்திரங்கள், துணிமணிகள் போன்றவற்றைத் திட்டமிட்டு வாங்க வேண்டும். சினிமா, நாடகம், உல்லாசப் பயணம் போன்ற பொழுதுபோக்குகளுக் கும் பணம் ஒதுக்கிவைக்கவேண்டும். விருந் தினர்கள், நோய்ச் சிகிச்சை போன்ற எதிர் பாராத செலவுகளுக்கென ஓரளவு தொகையைச் சேமித்துவைக்க வேண்டும். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியும், வசதியும், மனநிறைவும் உண்டாகும் வகையில் குடும்ப வரவுசெல வுத் திட்டத்தை வகுக்க வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மனை யியல் அறிவு இன்றியமையாததாகும். ஒவ்வொரு வீட்டின் நிருவாகமும் மனையிய லின் அடிப்படையில் சீராக நடைபெறு மானால், ஒரு நாட்டு மக்களின் சுகாதார மும், மனோதிடமும், வாழ்க்கைத் தரமும் உயர்நிலை அடையும். மனையியலைக் கல்லூரி களில் பாடமாக வைத்திருக்கிறார்கள். மனையியல் துறையில் தனிப் பட்டப் படிப் பும் அதற்கு மேல் ஆராய்ச்சிப் படிப்பும் படிக்க வசதிகள் உண்டு. மஜல்லன், பர்டினாண்டு (Ferdinand Magellan, 1480-1521) : கடல்வ ழியாக முதன் முதலில் உலகத்தைச் சுற்றிவர முற்பட்ட வர் பர்டினாண்டு ம ஜல்லன். இவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற மாலுமி . இளம் வயதில் இவர் அரண்மனையில் பணிப் பையனாக இருந்தார். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த வரலாற்றை அங்கு கேட்டறிந்தார். வாஸ்க்கோ ட காமா ஆப்பிரிக்காவைச் சுற்றி நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியாவை அடைந்த செய்தியும் இவரைக் கவர்ந்தது. தாமும் நாடாய்வாள ராகக் கடல் பயணம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. பலன் LP (301 பர்டினாண்டு மஜல்லன் மஜல்லன் 25ஆம் வயதில் ராணுவத் தில் சேர்ந்தார். சிறந்த ராணுவ அதிகாரி யாகவும், மாலுமியாகவும் புகழ்பெற்றார். போர்ச்சுகலிலிருந்து கடல்வழியாக மேற்கு நோக்கிப் பயணம் செய்து கிழக்கிந்தியத் தீவுகளை அடைய இவர் திட்டமிட்டார். இதைப் போர்ச்சுகல் மன்னர் ஆதரிக்க வில்லை. எனினும், ஸ்பெயின் மன்னர் மஜல்லனுக்கு ஊக்கமளித்து 5 கப்பல் களையும், 270 ஆட்களையும் கொடுத்து உதவினார். ஸ்பெயினிலிருந்து மஜல்லன் 1519 செப்டெம்பர் 20ஆம் நாள் புறப்பட்டுத் தென்மேற்காகக் கடலில் பயணம் செய் தார். இப் பயணத்தின்போது உணவுப் பற்றாக்குறை, குடிநீர்த் தட்டுப்பாடு போன்ற பல இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால் இவர் எவ்வித இன்னல்களையும் பொருட்படுத்தாமல் துணிவுடனும், விடாமுயற்சியுடனும் திட்டத்தை நிறை வேற்றி வந்தார், பல நாட்கள் சென்றபின் இக் கப்பல்கள் தென் அமெரிக்காவின் தென்கோடியிலுள்ள ஜலசந்தியை அடைந்தன. இது இவரது நினைவாக 'மஜல்லன் ஜலசந்தி' என்று இப்போது அழைக்கப்படுகிறது. அங்கு கடல் கொந்தளிப்பாக இருந்தது. இதைக் கடந்து மஜல்லன் மேற்கிலுள்ள சமுத்திரத்தை அடைந்தார். அங்கு கடல் அமைதியாக இருந்தது. அதற்கு பசிபிக் சமுத்திரம் என்ற பெயரை இவர் சூட்டினார். 'பசிபிக்' என்ற சொல்லுக்கு 'அமைதி' என்று பொருள்.