பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைய ARR வீடும் சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்கவேண்டும். தோட்டம் இருப்பது நல்லது. HICH O | HIND சத்துள்ள உணவைப் பக்குவமாகச் சமைக்க வேண்டும். குழந்தைகளை நன்கு பேணி வளர்க்கவேண்டும். SEARSOR TNIUITHIN TTIVININTRIBUI படம் - US இயல் சாக்கடை போன்ற அசுத்த நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டைச் சுற்றி மரங்களையும், செடிகொடிகளை யும் வளர்ப்பதால் நல்ல காற்றோட்டம் ஏற்படும்; அவற்றின் காய்களும் பழங்களும் பயன்படும். ஆரோக்கியமான வாழ்க்கைக்குச் சத் துள்ள உணவு இன்றியமையாதது. குடும் பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவை யான அளவு சத்துணவு கிடைக்கவேண் டும். உடல் நலத்திற்குத் தேவைப்படும் மாச்சத்துகள், புரதம், கொழுப்பு, தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் ஆகியவை தேவையான விகிதத்தில் உணவில் சேரும் வகையில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைத் தேர்ந் தெடுத்து வாங்கவேண்டும். அவற்றைச் சுவை, மணம், கவர்ச்சி முதலிய பண்பு களுடன் பக்குவமாகச் சமைத்தல் வேண் டும். இதற்கு உணவுப்பொருள்களின் தன்மை , அதன் ரசாயன அமைப்பு, அதிலுள்ள சத்துகளின் அளவு முதலியவை பற்றிய அறிவு மிகவும் அவசியம். சமையலின்போது மிகவும் கவனமாக இருந்து உணவுப்பொருள்கள் கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும், சமையலுக்கு இக் காலத்தில் பயன்படும் மின்சார அடுப்பு, வாயு அடுப்பு, அழுத்தக் குக்கர் (Pressure Cooker), குளிர்ப்ப தனப் பெட்டி போன்ற நவீன சாதனங்களின் அமைப்பு, இயங்கும் முறை பற்றியும் அறிந்திருப்பது நலம். குழந்தைகளைப் பேணுதலும் மனையிய லின் ஒரு பகுதியாகும். குழந்தைகளின் வளர்ச்சிப் பருவத்தில் எவ்வெப்போது என்னென்ன உணவு கொடுக்கவேண்டும் என்பதை அறிந்து செய்யவேண்டும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடம் நல்ல பண்புகள் அமையுமாறும், அறிவு வளர்ச் சியைத் தூண்டும் வகையிலும் பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுக்கவேண்டும். இதற்குக் குழந்தை உளவியல் பற்றிய அறிவு அவசியம். வேலைகளை எந்தெந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதைத் திட்டம் செய்து கொள்ளவேண்டும். நாள் முழுவதும் வீட்டுவேலைகளைச் செய்வதிலேயே கழித்து விட்டால், உடல் நலத்திற்குத் தேவையான ஓய்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நேரம் கிடைக்காமல் போய்விடும். உடல் உழைப் பைக் குறைப்பதற்குரிய எளிய கருவிகளை யும் எந்திரங்களையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். வேலையாட்கள் இல்லா திருந்தால், ஒருவரே எல்லா வேலைகளையும் செய்யாமல், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெற்று, வேலைகளைப்