பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவனே கத்தில் உயிரினங்களே இல்லை. நூறு கோடி ஆண்டுகளுக்குமுன், கண்ணுக்குப் புலப் படாத மிக நுட்பமான உயிர்கள் கடலில் மட்டும் வாழ்ந்தன. நிலத்தில் உயிர் வாழ்க்கை சுமார் 45 கோடி ஆண்டு களுக்கு முன்புதான் தோன்றியது. நிலத் தில் வாழும் உயிர்களில் வாலில்லாத, மாபெரும் மனிதக் குரங்குகள் 4 கோடி ஆண்டுகளுக்கு முன் உண்டாயின. ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், தோற்றத் தில் மனிதனைப்போன்ற குரங்குகள் பெருகின. இக் குரங்குகள் மேலும் வளர்ச்சி யடைந்து, 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் சற்றுப் பெரிய மூளையும், கூர்மையான கண்களும், திறமையான கைகளும் உடை யனவாக உருமாறின. இந்த ஆதிக் குரங்கி லிருந்து தோன்றிய நேரடிச் சந்ததியினரே இன்றைய மனிதர்கள் என்று ஆங்கில விஞ்ஞானி டார்வின் (த.க.) தமது பரிணாமக் கொள்கையில் கூறியுள்ளார். குரங்கிலிருந்து மனிதன் நேரடியாகத் தோன்றியிருக்க முடியாதென்றும், எனினும் இக் குரங்குகளும் மனிதனும் ஒரு பொதுவான மூதாதையிலிருந்து தோன்றி யிருக்கலாம் என்றும் வேறுசில விஞ்ஞானி கள் கருதுகின்றனர். தோல், தலைமயிர், கண் இவற்றின் நிறம், மண்டையின் அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றையொட்டி, உலக மக்களை மூன்று பெரும் இனங்களாகப் பிரித்துள்ளனர். வெள்ளை நிறமுடையவர் கள் காக்கசாயிடுகள் ( Caucasoids). ஐரோப்பியர்களில் பெரும்பாலோரும், அராபியர்களும், இந்தியாவிலுள்ள இந்தோ - திராவிடர்களும் இவ்வினத் தைச் சேர்ந்தவர்கள். ஆப்பிரிக்காவிலும், பசிபிக் தீவுகளிலும் வாழும் கறுப்புநிறமான நீக்ரோக்கள் நீகிராய்டு (Negroids) என்னும் இனத்தவர்கள். சீனர்கள், ஜப்பானியர், மங்கோலியர், அமெரிக்க இந்தியர் , எஸ்கி மனையியல் மனிதன் என்பது ஒரு கொள்கை மோக்கள் போன்ற மஞ்சள் நிறமுடைய வர்கள் மங்கோலாய்டுகள் (Mongoloids) ஆவர். இன்று உலகிலுள்ள மனித இனங்க ளிடையே பெருமளவில் கலப்பு ஏற்பட் டுள்ளது. எனவே எந்த இனத்தையும் தூய்மையான இனமாகக் கருத முடியாது. மேலும், எந்த இனத்தையும் உயர்ந்த தாகவோ தாழ்ந்ததாகவோ கருத இய லாது. திறமையும் வசதியும், வாய்ப்பும் இருந்தால், எந்த இனத்தைச் சேர்ந்த வரும் உயர்ந்த சாதனைகளைப் புரிய முடியும். மனையியல் (Home Science) : வீட்டை யும் சுற்றுப்புறத்தையும் சுகாதார முறைப் படித் தூய்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வது எப்படி? குழந்தைகளை எவ்வாறு பேணி வளர்க்கவேண்டும்? நல்ல ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் இருப்பது எப்படி? குடும்பத்தினரின் உடல் நலத்திற்கு ஏற்ற வகையில் ஊட்டச் சத்து நிறைந்த உணவைத் தயாரிப்பது எவ்விதம்? குடும்பத்தைச் சீராக நிருவ கிப்பது எப்படி? சிக்கனமாகத் திட்ட மிட்டுக் குடும்பத்திற்குச் செலவிடுவது எப்படி? வருங்காலத்திற்குச் சேமித்து வைக்க வழிகள் என்ன? இவை பற்றி யெல்லாம் விளக்குவது மனையியல். 'சுத்தம் சோறு போடும்' என்பது பழ மொழி. குடும்பத்தினர் உடல் நலத்துடன் இருக்க, வீடும் சுற்றுப்புறமும் தூய்மை யாகவும் அழகாகவும் இருத்தல் வேண் டும். நோய்களைப் பரப்பும் கொசு முதலிய பூச்சிகள் பரவாமல் அவ்வப்போது மருந்து தெளிக்கவேண்டும். துணிகளை அவ்வப்போது துவைத்து, உலர்த்தி மடித் துச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண் டும். சமையல் பாத்திரங்களைப் பயன்படுத் தும் முன்னும் பின்னும் நன்றாகக் கழுவ வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களில்