பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகை மிளகு - மின் Co 05.01 20 லலல் ( யொRILLIAN காங் மிளகுக் கொடி மிளகு : சமையலுக்குப் பயன்படும் நறுமணப் பொருள்களில் மிகவும் முக்கிய மானது மிளகு. மிளகு ரசம் செய்வதை நீங்கள் அறிவீர்கள். மிளகு மிகுதியாகச் சேர்த்துத் தயாரிக்கப்படுவது மிளகு ரசம். கொடியாகப் படரும் ஒரு தாவரத்தின் கனிதான் மிளகு. இந்தியாவே இதற்குத் தாயகம். மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பக்கத்தில் கேரள மாநிலத்தில் மிளகு பெருமளவில் பயிராகிறது. இந்தியாவிலிருந்து தான் இது மற்ற நாடு களுக்குப் பரவியது. வெப்பமும் மழையும் மிகுதியாக உள்ள இடங்களில் மிளகு செழிப்பாக வளரும். விதையிலிருந்தும் கொடிகளில் வெட்டிய நறுக்குகளிலிருந்தும் மிளகுக் கொடியைப் பயிர் செய்வார்கள். இக்கொடியின் தண்டிலுள்ள கணுக்களில் ஒட்டுவேர்கள் வளரும். இவ்வேர்களின் உதவியால் மரம், கல்தூண் முதலியவற்றின் மேல் கொடி படரும். மிளகுக் கொடி நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக் கத் தொடங்கும். நீண்ட கதிர்களில் சிறிய, உருண்டையான கனிகள் தோன் றும். இவற்றைப் பறித்து உலர்த்தி மிளகு தயாரிப்பார்கள். மிளகு உலர்ந்தபின் கருநிறமாக இருக்கும். அதன்மேல் உள்ள கரிய, உலர்ந்த தோலை நீக்கிவிட்டால் வெள்ளை மிளகு கிடைக்கும். மிளகுக் கொடி 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்து பலன் கொடுக்கும். அதற்குமேலும் கொடி கள் வாழ்வதுண்டு. கலங்கள் 17 இந்தியாவில் நெடுங் காலமாக மிளகு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நாம் பயன்படுத்தும் மிளகாயை இந்தியா வில் பரப்பியவர்கள் போர்ச்சுகேசியராவர். தென் அமெரிக்க நாடுகளில் மிளகாய் மிகுதி. அங்கு சென்று குடியேறிய போர்ச்சு கேசியர் அதனைப் பின்னர் இந்தியாவுக் கும் கொண்டுவந்து பரப்பினர். அதற்கு முன் இந்தியர்கள் மிளகையே பயன்படுத்தி வந்தனர். மிளகாயை விட மிளகு காரம் குறைந்தது; இனிய மணமும் உள்ளது. அதனால் உணவுப்பொருள்களுக்கு இது நல்ல சுவையும் மணமும் அளிக்கிறது. மிளகு சிறந்த மருந்தும் ஆகும். பெரும் பாலான மருந்துகளில் மூன்று மூலிகை களைச் சேர்ப்பது இந்தியர்களுடைய வழக் கம். இவை, சுக்கு மிளகு திப்பிலி என்னும் திரிகடுகம் ஆகும். இவற்றுள் சிறந்தது மிளகு. பழங் காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகிய பொருள்களில் முக்கிய மானது மிளகு. கிரேக்கர், ரோமானியர் முதலிய ஐரோப்பிய நாட்டினர் மிளகுக்கு அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்ற னர். போர்ச்சுகேசியர், டச்சுக்காரர் ஆகியோர் இந்தியாவுக்கு வழி கண்டு பிடிக்க முற்பட்டது, மிளகு போன்ற நறு மணப் பொருள்களுக்காகவே. மின்க லங்க ள் (Electric cells) : மின் சாரக் கைவிளக்கு (Torch), டிரான்ஸிஸ்ட் டர் வானொலிப் பெட்டி முதலியவற்றில் நாம் மின்கலங்களைப் பயன்படுத்துகிறோம் அல்லவா? அவற்றுக்குத் தேவையான மின்சாரத்தை இந்த மின்கலங்கள் தருகின் றன. மின்கலங்களில் சில ரசாயனப் பொருள்கள் உள்ளன. இந்த ரசாயனப் சேமக் கலம்