பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மின்க செப்புத் தகடு துத்தநாகத் தகடு நீர்த்த கந்தக அமிலம் வோல்ட்டா மின்கலம் பொருள்களில் சக்தி அடங்கியுள்ளது. இந்த ரசாயனப் பொருள்கள் ஒன்றோ டொன்று வினைப்பட்டால் அவற்றி லிருந்து சக்தி வெளியாகிறது. மின்கலங் களில் ரசாயன சக்தியானது மின்சக்தி யாக மாறுகிறது. பார்க்க : சக்தி. மோட்டார் காரிலும் மின்கலம் உள்ளது. எஞ்சினை இயக்குவதற்கும், காரி லுள்ள பல விளக்குகளுக்கும், ஒலி எழுப்பு வதற்கும் அதில் உள்ள மின்கலம் பயன் படுகிறது. ரெயில், கப்பல், ஆகாய விமானம் முதலியவற்றிலும் மின்கலங்கள் உள்ளன. மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களில் மின்சாரம் திடீரென்று தடைப்பட்டுவிட்டால், தொடர்ந்து மின்சாரத்தைப் பெற மின்கலங்கள் வைக்கப்பட்டுள்ளன. தந்தி தொலைபேசி நிலையங்களிலும் மின்கலங்கள் தேவைப்படுகின்றன. மின்சார வசதி இல்லாத கிராமங்களில் மின்கலங்கள் பெரிதும் பயன்படுகின்றன. பிரதம மின்க லம் (Primary cell), துணை மின்க லம் (Secondary cell) என மின் கலங் களில் இரண்டு வகை உண்டு. பிரதம மின்கலத்தில் ரசாயனப் பொருள்களை அடிக்கடி மாற்றவேண்டும். ஓரளவு பயன் படுத்தப்பட்டதும், ரசாயனப் பொருள் கள் உண்டாக்கும் மின்சக்தி குறைந்து விடும். மீண்டும் ரசாயனப் பொருள்களைப் புதிதாக நிரப்பவேண்டும். பிரதம மின்கலத்தை முதன்முதலில் வோல்ட்டா (Alessandro Volta) என்ற இத்தாலிய விஞ்ஞானி 1799-ல் செய் தார். இதற்கு 'வோல்ட்டா மின்கலம்' என்று பெயர். இதில், படத்தில் காட்டி யுள்ளதுபோல் நீர்த்த கந்தக அமிலம் நிரம் கலங்கள் பிய கண்ணாடிப் பாத்திரத்தில் ஒரு செப்புத் தகடும், ஒரு துத்தநாகத் தகடும் ஒன்றையொன்று தொடாவண்ணம் நிறுத் தப்பட்டிருக்கும். இந்த இரு தகடுகளின் வெளி முனைகளை ஒரு செப்புக் கம்பியால் இணைத்தால், அந்தக் கம்பி வழியாக மின்னோட்டம் பாயும். செப்புக் கம்பியை வெட்டி, அந்த இடத்தில் ஒரு சிறு விளக் கைப் (Bulb) பொருத்தினால் அது மங்கலாக ஒளிவிடுவதைக் காணலாம். இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து பல விஞ்ஞானிகள் வேறு ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி, மேலும் மேலும் திருத்தியமைத்துப் பலவகையான மின்கலங்களைத் தயாரித்தார்கள். மின்சாரக் கைவிளக்கு போன்ற சாதனங்களில் நாம் பயன்படுத்தும் பசை மின்கலம் (Dry cell) பிரதம மின்கலமே யாகும். இதில் ரசாயனப்பொருள்கள் திரவ நிலையில் இல்லாமல் பசையாக இருக்கும். எனவே எந்தக் கோணத்தில் வைத்தாலும் இதிலிருந்து ரசாயனப் பொருள் கீழே கொட்டாது. இதில் நாம் ரசாயனப் பொருள்களை மாற்றுவதில்லை; நன்கு பயன் படுத்தப்பட்டதும் மின்கலத்தையே புதிதாக மாற்றிவிடுகிறோம். இரண்டாவது வகையான துணை மின் கலத்தில் ரசாயனப் பொருள்களை மாற்ற வேண்டியதில்லை. ரசாயனப் பொருள்கள் வினைப்படுவதால் மின்சக்தி கிடைக்கிறது அல்லவர்? மின்கலம் பயன்படுத்தப்பட்ட வுடன் அந்த ரசாயனப் பொருள்கள் மாறுதல் அடைந்துவிடுகின்றன. துணை மின்கலத்தில் ஒரு மின்னோட்டத்தைச் செலுத்தினால், அந்த ரசாயனப் பொருள் களை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரலாம். இதை மின்னேற்றம் (Charging) என்று சொல்வார்கள். மோட்டார் காரி லுள்ள மின்கலம் துணைமின்கலமாகும். இதைச் சேமக்க லம் (Accumulator) என்றும் சொல்வார்கள். ரெயில், கப்பல், ஆகாய விமானம் முதலிய ஊர்திகளிலும், தந்தி தொலைபேசி நிலையங்களிலும் பயன் படுபவை சேமக் கலங்களே. மின்கலத்திலிருந்து குறைந்த அளவு மின்சாரமே கிடைக்கும். பசை மின்கலம் சாதாரணமாக 1.5 வோல்ட் மின் அழுத் தம் உடையது. இரண்டு மின்கலங்களைத் தொடராக இணைத்தால், இருமடங்கு மின்சக்தி கிடைக்கும். மின்சாரக் கை விளக்கில் சாதாரணமாக இரண்டு மின் கலங்களே பயன்படுகின்றன. டிரான் ஸிஸ்ட்டர் வானொலிப் பெட்டிகளுக்கு நான்கு அல்லது ஆறு மின்கலங்கள் தேவைப்படுகின்றன. மோட்டார் சைக் கிள், கார் முதலியவற்றில் 6 அல்லது 12