பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்காந்தம் -1 வோல்ட் மின் அழுத்தம் கொண்ட சேமக் கலங்கள் பயன்படுகின்றன. வீடுகளில் நாம் பயன்படுத்தும் மின்சாரம் 220 வோல்ட் மின் அழுத்தம் உடையது. மின்காந்தம் (Electromagnet) : காந்தத் திற்கு (தக.) இரும்பைக் கவரும் ஆற்றல் உண்டு எனறு நமக்குத் தெரியும். இரும்பு, எஃகு, நிக்கல் முதலியவற்றைக் காந்த சக்தி உடையதாக ஆக்கலாம். ஓர் இரும் புத் துண்டின் மீது காந்தத்தைப் பலமுறை தேய்த்தால் அந்த இரும்புத் துண்டும் காந்த சக்தியைப் பெற்றுவிடும். P apanAAAAIS ICUUUUUUU800000 மின்காந்தம் என்பது மின்சாரத்தால் உண்டாக்கப்படும் காந்தம். படத்தில் உள்ளவாறு ஓர் இரும்புத் துண்டில் மின் கம்பியைச் சுற்றி, அந்தக் கம்பியில் மின்சாரத்தைச் செலுத்தினால், இரும்புத் துண்டு காந்தத் தன்மை பெற்றுவிடும். மின்சாரத்தை நிறுத்திவிட்டால் இரும்புத் துண்டு காந்தத் தன்மையை இழந்துவிடும். வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு என இரும்பில் மூன்று வகை உண்டு. மின்காந் தங்கள் பெரும்பாலும் தேனிரும்பினால் ஆனவை. காந்தத்தைப் போலவே மின் காந்தத்திற்கும் வடமுனை-தென்முனை என இரண்டு முனைகள் உண்டு. மின்காந்தத்தை எந்த வடிவத்திலும் அளவிலும் அமைக்க லாம். மின்சாரத்தை அதிகமாகச் செலுத்தி, மின்காந்தத்தின் சக்தியை வீட்டினுள் இருப்பவரை அழைக்கச் சில வீடுகளில் மின்சார அழைப்பு மணி (Calling bell) பொருத்தப்பட்டிருக்கும். வாசலில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் வீட்டினுள் மணி அடிக்கும். இந்த மின்சார அழைப்பு மணியில் மின்காந்தம் பயன் படுகிறது. மின்கலம், மின்காந்தம், சிறு சுத்தியல் இவை ஒரு கம்பியால் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ளன. மின்கலத்தில் ஒரு முனையிலிருந்து கம்பி மின்காந்தத்திற்குச் செல்கிறது; மின் காந்தத்திலிருந்து சுத்தியலுக்குச் செல்கிறது. இந்த சுத்தியலை ஒரு திருகு இலேசாகத் தொட்டுக்கொண்டிருக்கும். மின் கலத்தின் மற்றொரு முனையிலிருந்து வரும் கம்பி, இந்தத் திருகுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மின்கலத்தில் தொடங்கி மின்கலத்திலேயே முடியும் இந்தப் பாதையை மின் சுற்று (Circuit) என்பர். மின்சுற்றில் இடையே ஒரு பொத்தான் உண்டு. இதை அழுத்தினால் மின்சுற்றில் மின்சாரம் பாயும். மின்சுற்று தொடர்ச்சியாக இருந்தால் தான் அதில் மின்சாரம் பாயும். நடுவில் எங்காவது தொடர்பு துண்டிக்கப்பட்டால் மின் சுற்றில் மின்சாரம் பாயாது. மின்சாரம் பாய்வதால் மின்காந்தம் காந்த சக்தியைப் பெற்று, சுத்தியலைக் கவருகிறது. சுத்தியல் நகர்ந்து மணியின் மீது பட்டு படங்' என்று ஒலிக்கிறது. அதே சமயம், சுத்தியல் திருகை விட்டு நகர்ந்துவிடுவதால், சுத்தியலுக்கும் திருகுக்கும் தொடர் பில்லாமல் போய்விடுகிறது. இப்போது மின்சாரம் பாயாது. எனவே மின்காந்தத்திற்கு காந்த சக்தி இராது. சுத்தியல் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். இப்போது திருகைத் தொடுவதால் மீண்டும் மின்சாரம் பாயும். மின்காந்தம் சுத்தியலைக் கவரும். மீண்டும் மணி அடிக்கும். பொத்தானை அழுத்திக் கொண்டிருக்கும் வரை தொடர்ந்து மணி அடித்துக்கொண் டிருக்கும். மின்காந்தவியல் 19 அதிகமாக்கலாம். எனவே, மின்சாரத்தின் அளவைக் கூட்டியோ குறைத்தோ மின் காந்தத்தின் கவரும் ஆற்றலைக் கட்டுப் படுத்தலாம். சாதாரணக் காந்தத்தைச் செய்ய அதிகக் காலம் ஆகும். அதன் காந்தத் தன்மையை நீக்குவதற்கும் அதிகக் காலம் ஆகும். ஆனால் மின்காந்தத்தில் தேவைப் படும்போது மின்சாரத்தைச் செலுத்தி ஒரு நொடியில் காந்த சக்தியைப் பெறலாம். அவ்வாறே மின்சாரத்தை நிறுத்திவிட் டால் மின்காந்தம் ஒரு நொடியில் காந்தத் தன்மையை இழந்துவிடும். இத் தன்மைகளால் மின்காந்தம் பல துறைகளில் பல சாதனங்களில் பயன்படு கிறது. இன்று நாம் பயன்படுத்தும் தொலை பேசி, தந்தி, மின்சார மோட்டார், மின் சார அழைப்பு மணி (Calling bell) முதலிய சாதனங்களிலும் தொழிற்சாலைகளில் கிரேன்கள் போன்ற பலவகையான பெரிய எந்திரங்களிலும் மின்காந்தங்கள் உள்ளன. பார்க்க : காந்தம்; மின்காந்த வியல். மின்காந்தவியல் (Electromagnetism) : மின் சக்தியைப் பற்றி ஆராயும் அறிவியல் துறைக்கு மின்சாரவியல் என்று பெயர். காந்த சக்தியைப் பற்றி ஆராய்வது காந்த வியல். இவையிரண்டும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. அதைப் பற்றி ஆராய் வதே மின்காந்தவியல் ஆகும். மின்சாரத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டென்மார்க் நாட்டு விஞ்ஞானியான ஆர்ஸ்ட்டெட் (Oersted) என்பவர் 1820-ல் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். ஒரு கம்பியின் வழியே பொத்தான் மின்கம்பி மின்காந்தம் திருகு பின்கலம் சுத்தியல் மின்சார அழைப்பு மணி மணி