பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்சாரம் பாயும்போது அருகிலுள்ள காந்த ஊசி பாதிக்கப்பட்டு விலகுவதை அவர் கண்டார். காந்தத்தை அருகே கொண்டுவந்தால் எவ்வாறு காந்த ஊசி விலகுமோ அதேபோல் மின்சாரம் பாயும் போதும் விலகியது. எனவே மின்சாரம் பாயும்போது, கம்பியைச் சுற்றிக் காந்த மண்டலம் உண்டாகிறது என்று அவர் கூறினார். பாரடே (த.க.) என்ற ஆங்கில விஞ்ஞானியும் இது பற்றி ஆராய்ச்சி செய் தார். ஒரு மின்னோட்டத்தால் காந்த மண்டலம் உண்டாகிறது; எனவே ஒரு காந்த மண்டலத்தால் மின்சாரம் உண்டாகவேண்டும் என்று அவர் எண்ணினார். ஒரு கம்பிச் சுருளினூடே ஒரு காந்தத்தை முன்னும் பின்னுமாக நகர்த் தினால், அந்தக் கம்பியில் மின்னோட்டம் பாய்வதை அவர் கண்டார். காந்தம் நகர்ந்து கொண்டிருந்தால் தான் மின் சாரம் பாயும்; காந்தத்தை நகர்த்தாவிட் டால் மின்சாரம் பாயாது. இதை அடிப் படையாகக் கொண்டே மின்னாக்கிகள் (த.க.) தயாரிக்கப்படுகின்றன. பார்க்க : காந்தம்; மின்காந்தம்; மின்னாக்கி. மின்சாரம் (Electricity) : இரவில் மின்சார விளக்கின் உதவியால் படிக் கிறோம். புழுக்கமாக இருந்தால் மின்விசிறி யைப் போட்டுக்கொள்கிறோம். துணிகளை மின்சார இஸ்திரிப் பெட்டியால் தேய்க் கிறோம். வானொலியில் பாட்டுக் கேட் கிறோம். இருட்டில் வெளியில் செல்லும் பொழுது மின்சாரக் கைவிளக்கை எடுத் துச் செல்கிறோம். சமையலுக்கு மின்சார அடுப்புப் பயன்படுகிறது. மற்றும் குளிர்ப் பதனப்பெட்டி, மின்சார மோட்டார், மின்சார ரெயில் போன்ற எத்தனையோ சாதனங்கள் நமக்கு நாள்தோறும் பயன் படுகின்றன. இன்றைய வாழ்க்கையில் மின்சாரம் பெரும் மாறுதல்களை உண்டாக்கியிருக்கிறது. ஒரு வேலையைச் செய்யக்கூடிய திறனைச் சக்தி (த.க.) என்பார்கள். சக்தியின் ஒரு வடிவமே மின்சாரம் ஆகும். கிரேக்கர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே மின்சாரம் பற்றி அறிந்திருந் தார்கள். அம்பர் என்னும் பிசின் துண்டை மென்மயிரினால் (Fur) தேய்த்த தும், அது இலேசான பொருள்களைக் கவரும் என்று அவர்கள் கண்டனர். வேறு சில பொருள் களுக்கும் இத்தன்மை உண்டு என்பதைப் பின்னர் விஞ்ஞானிகள் அறிந்தனர். மின்சாரத்தை நல்ல முறையில் பயன் படுத்துவதற்கு, இடைவிடாத ஒரே சீரான மின்னோட்டத்தை (Electric current) உண் சாரம் டாக்குவதற்குரிய வழிவகைகளைக் காண முயன்றனர். இதற்கு அணுவைப் பற்றிய ஆராய்ச்சி பெரிதும் உதவியது. எல்லாப் பொருள்களும் அணுக்கள் (த.க.) எனப்படும் மிக நுண்ணிய பகுதி களாலானவை. ஒவ்வோர் அணுவும் எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் என்ற மிகமிக நுண்ணிய பகுதிகளைக் கொண்டது. புரோட்டான் களும், நியூட்ரான்களும் அணுவில் நிலை யாக இருக்கின்றன. ஆனால், எலெக்ட் ரான்கள் மீது ஏதேனும் உந்தல் ஏற்பட் டால், அவை அணுவுக்கு அணு தாவிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு எலெக்ட்ரான்கள் ஒரு பொருளில் அணு வுக்கு அணு தொடர்ந்து தாவிக் கொண்டே இருப்பதுதான் மின்னோட்டம் எனப்படும். அணுவில் எலெக்ட்ரான்கள் ஒரே திசை யில் இயங்குவதால் ஏற்படும் மின்னோட் டம் நேர் மின்னோட்ட ம் (Direct current) எனப்படும். எலெக்ட்ரான்கள் முன்னும் பின்னுமாகத் திசைமாறி இயங்குவதால் உண்டாகும் மின்னோட்டத்தை மாறுமின் னோட்ட ம் (Alternating current) என்கின்ற னர். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறந்தவை. ரசாயன விளைவுகளை உண்டாக்குவதற்கு நேர்மின்னோட்டம் ஏற்றது. மின்சாரத்தை அதிக விரயமின்றி இடம்விட்டு இடம் கொண்டு செல்வதற்கு மாறுமின்னோட்டம் சிறந்தது. மின்னோட்டத்தை உண்டாக்கக்கூடிய சாதனம் ஒன்றை வோல்ட்டா (Volta ) என்னும் இத்தாலிய விஞ்ஞானி 1799-ல் கண்டுபிடித்தார். இதற்கு மின்கலம் ( Electric cell) என்று பெயர். இதில் ரசாயன வினையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்தது. இதன் மூலம் மிகக் குறைந்த அளவு மின்சாரமே கிடைத்தது. வலுவான மின்சாரத்தைப் பெறக்கூடிய வகையில் வேறு பலவகை மின்கலங்கள் திருத்தி அமைக்கப்பட்டன. மின்சாரக் கைவிளக்கு, டிரான்ஸிஸ்ட்டர், மோட் டார் வண்டிகள் முதலியவற்றில் பலவகை மின்கலங்கள் பயன்படுகின்றன. பார்க்க : மின்கலங்கள். மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற் றோரிடத்திற்குக் கொண்டுசெல்வதற்குச் செம்பு போன்ற உலோகக் கம்பிகள் பயன் படுகின்றன. இவற்றைக் கடத்திகள் (Con ductors) என்பர். பெரும்பாலான உலோகங் களும், உப்பு நீர் போன்ற திரவங்களும் மின்சாரத்தை எளிதாகக் கடத்தும். எனவே இவற்றை 'எளிதில் கடத்திகள்' (Good conductors ) என்பர். மைக்கா, கண்ணாடி, பிளாஸ்ட்டிக், வரண்ட காற்று