பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொன்மீன் (ஓராண்டா) பாய்மர மீன் சால்மன் மையை அடிப்படையாகக் கொண்டு மின் சாரத்தை உற்பத்தி செய்வதற்குரிய எந் திரம் ஒன்றை அவர் அமைத்தார். அதற்கு டைனமோ எனப் பெயரிட்டார். இதைத் தான் இன்று மின்னாக்கி மின்னாக்கி என்கிறோம். இது எந்திர சக்தியை (Mechanical energy) மின்சார சக்தியாக மாற்றுகிறது. ஒரு சாதாரண மின்னாக்கியில் புலக் காந் தம் (Field magnet), செலுத்தி வளையம் (Armature), தழுவு வளையங்கள் (Slip rings), புருசுகள் (Brushes) என்ற முக்கிய உறுப்பு கள் இருக்கும். புலக் காந்தம் நிலையானது. இதன் இரு துருவங்களுக்குமிடையில் செலுத்தி வளையத்தைச் சுழலச் செய் தால், அதில் மின்னோட்டம் ஏற்படும். அந்த மின்னோட்டத்தை தழுவு வளையங் கள் புருசுகள் இவற்றின் வழியாக வேண் டிய இடத்திற்குக் கொண்டுசெல்லலாம் காந்தத்தின் வலிமையையும், சுற்றும் வேகத்தையும் பொறுத்து அதிக விசை யுள்ள அல்லது குறைந்த விசையுள்ள மின்சாரத்தைப் பெறலாம். மின்னாக்கிகள் பல அளவுகளில் உள்ளன. சைக்கிளிலுள்ள டைனமோ மிகச் சிறிய மின்னாக்கி. மோட்டார் காரில் இருக்கும் மின்னாக்கி சற்றுப் பெரியது. பெரிய நகரங் களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கக்கூடிய மிகப் பெரிய மின்னாக்கி களும் உள்ளன. பார்க்க : மின்சாரம். மீன்: சிலர் தம் வீடுகளில் அழகிய பல மீன்களைத் தொட்டியிலிட்டு வளர்ப் பதைப் பார்த்திருப்பீர்கள். இயற்கையில் நீர்நிலைகளிலும், ஆறுகளிலும், கடல்களி னும் மீன்கள் கோடிக்கணக்கில் உள்ளன. முதுகெலும்புள்ள மற்ற எல்லா உயிரினங் களையும்விட இவற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒரு சென்டிமீட்டர் நீளமே உள்ள மிகச் சிறிய மீனிலிருந்து, 15 மீட்டர் நீளமுள்ள திமிங்கிலச் சுரு (Whale Shark) வரை உண்டு. ஆனால் கடலில் வாழும் திமிங்கிலம் (த.க.) மீன் அல்ல. அது குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் பாலூட்டி விலங்குகளில் ஒன்று. சில மீன்கள் நல்ல நீரில் மட்டுமே வாழ முடியும். சில மீன்கள் கடல்நீரில் மட்டுமே வாழமுடியும். சில மீன்கள் இரண்டிலும் வாழக்கூடும். மீன் ஒரு குளிர் ரத்தப் பிராணி (த.க.). இதன் உடலின் வெப்ப நிலை சுற்றிலுமுள்ள நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். நீரில் வாழ்வதற்கு ஏற்றவாறு மீனின் உடல் அமைந்திருக்கிறது. அதன் உடலில் நடுப் பகுதி பருத்தும், தலைப் பக்கமும் வால் பக்கமும் குளிந்து சிறுத்தும் இருக் கின்றன. இவ்வாறு அதன் உடல் ஓர் சுரு கெளுத்தி காட். குர்னார்டு மீன் மலங்கு