பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 மின்மீன்கள் - மின்னாக்கிகள் மின்மலங்கு மின்கெளிறு மின்மீன்கள் யைக் கூடக் கலங்கச் செய்துவிடும்; மனிதனுக்கும் பலத்த அதிர்ச்சி ஏற்படும். மின்திருக்கை என்னும் மீன் அட்லான் டிக் சமுத்திரத்திலும், இந்திய சமூத்திரத் திலும், மத்தியதரைக் கடலிலும் காணப் படுகிறது. இது சுமார் ஒன்றரை மீட்டர் நீளமும் ஒரு மீட்டர் அகலமும் உள்ளது. உடல் தட்டையாக இருக்கும். வட்டமான உடம்பின் இரு பக்கங்களிலும் மின்னுறுப்பு கள் உள்ளன. தசைத் திசுக்கள் இவ்வாறு மாதியுள்ளன. மேல்தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் தேனடைகள்போல் மின் ணுறுப்புகள் காணப்படும். மின் திருக்கை தன் இரையைப் பற்ற இந்த மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. இவ்வகையைச் சேர்ந்த ஒரு சிறிய மீளை அடிப் பக்கமும் மேல் பக்கமும் நம் கைவிரல்களில் பொருந்தும் படிப் பிடித்து எடுத்தால் மின் அதிர்ச்சியை நாம் உணர முடியும். மின்கெளிறு ஆப்பிரிக்காவில் நைல் ஆற்றிலும், அங்குள்ள மற்றும் பல ஆறு களிலும் ஏரிகளிலும் காணப்படுகிறது. இது சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ளது; இதைப் பூளை மீன் என்றும் சொல்வார் கள். அரேபியர் இதை உணவாகக் கொள் கிறார்கள். தோலுக்கு அடியில் ஓர் உறை போன்று உடல் நெடுகிலும் மின்சார உறுப்புகள் உள்ளன. விண்மீன்நோக்கி (Star gazer) என்னும் மீனின் மின்னுறுப்புகள் தலையில் உள்ளன. இந்த மீன் சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுள்ளது. இது மணலில் புதைந்திருக் கும். மின்மீன்கள் மின்னதிர்ச்சியைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது. மின்சார சக்தி முழுதும் வெளியேறிவிட்டால், சிறிது நேரம் சென்ற பின்புதான் இவை மீண்டும் மின் சாரத்தை உண்டாக்க முடியும். மின்னல்: மழைக் காலத்தில் மின்னல் உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள். இரண்டு மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கும்பொழுது, ஒன்றிலிருந்து, மற் மின்சக்தி றொன்றுக்கு பாயும். பொழுது கண்ணைப் பறிக்கும் ஒளி உண்டாகும். அதைத்தான் 'மின்னல்' என்று சொல்கிறோம். பார்க்க : இடி. மின்னல். அப் பயன் மின்னாக்கிகள் (Electric Generators) : இரவில் சைக்கிளில் செல்லும்பொழுது. எண்ணெயால் எரியும் விளக்கைப் பயன் படுத்துகின்றனர். டைனமோவினால் எரியும். மின்சார விளக்கையும் பலர் படுத்துகின்றனர். சைக்கிள் சக்கரத்தின் அருகே இந்த டைனமோ பொருத்தப்பட் டிருக்கும். சைக்கின் சக்கரத்திலுள்ள டயர் மீது உராயச் செய்து டைனமோவைச் கழ்லும்படி செய்யலாம். சைக்கிளின் முன்பக்கமுள்ள விளக்கின் பல்புடன் மின் கம்பி மூலம் இந்த டைனமோ இணைக்கப் பட்டிருக்கும். டைனமோ சுழலும்போது அதில் மின்சாரம் உற்பத்தியாகும். அந்த மின்சாரம் கம்பி வழியே பல்புக்குச் சென்று அதை எரியச் செய்யும். சைக்கிள் விளக்கு எரிவதற்குப் பயன்படும் டைனமோ ஒரு வகை மின்னாக்கியாகும். மின்சார சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமே மின்னாக்கி எனப்படும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குக் காந்த மண்டலத்தைப் (Magnetic field ) பயன்படுத்தலாம். என்பதை பாரடே (த.க.) என்ற விஞ்ஞானி 1831-ல் கண்டு பிடித்தார். ஒரு காந்தத்தின் அருகில் செப் புக் கம்பி போன்ற ஒரு கடத்தியையோ (Conductor) அல்லது ஒரு கடத்தியின் அருகில் ஒரு காந்தத்தையோ கொணர்ந்து இயங் கும்படி செய்தால் அக் கடத்தியில் மின் னோட்டம் ஏற்படும் என்ற உண்மையை பாரடே கண்டறிந்தார். இந்த உண் பீகாரில், பொக்காரோவிலுள்ள ஒரு பெரிய மின்னாக்கி