பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெள்ளிக் கட்டி வெள்ளி சயனைடு மின்முலாம் பூசுதல் மின்மினி - மின்மீன்கள் மின்கலத்திலிருந்து வரும் கம்பிகள் சுரவாடி வெள்ளிப்பூச்சு கொடுக்கவேண்டுமென் வ் மின்பகு திரவம் வெள்ளி அடங்கிய திரவமாக இருக்கவேண்டும். படத்தைப் பாருங்கள். இதில் வென்னி சயனைடு (Silver Cyanide) மின்பகு திரவமாகும். மின்கலத்தின் ஒரு முனையிலிருந்து வரும் கம்பி, வெள்ளிக் கட்டி ஒன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். மின்சாரம் பாயும்போது பாயும்போது கரண்டியைச் சுற்றி அதன்மீது வெள்ளி படிந்து விடுகிறது. மின்சாரம் அதிக நேரம் பாய்ந் தால் கரண்டிக்குக் கொடுக்கப்படும் வெள் ளிப்பூச்சும் அதிகமாக இருக்கும். மின்மினி: இரவில் மினுக், மினுக் என்று ஒளிவிட்டு, மின்னிக்கொண்டு பறக் கும் சிறு பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். விந்தையான இப் பூச்சிகளே (Glow worms) ஆகும். மின்மினி மின்மினியில் பலவகை உண்டு. இந்தியா வில் வாழும் இனங்களைவிட அமெரிக்கா வில் வாழ்பவை உருவில் பெரியவை. பல இனங்களில் ஆண் மட்டுமே பூச்சி வடிவில் இருக்கும்; இதற்குச் சிறகுகள் உண்டு. பெண் பூச்சிகளுக்குச் சிறகுகள் இல்லை. இவை புழு வடிவில் இருக்கும். ஆண், பெண் இரண்டுமே ஒளிவிட்டு வெளிச்சம் கொடுக்கும். எனினும் புழு வடிவில் உள்ள பெண் பூச்சியின் ஒளி சற்று அதிகம். சிவ ஆண் மின்மினி பெண் 23 இனங்களில் முட்டை, லார்வா, கூட்டுப் புழு ஆகிய நிலைகளிலும் ஒளிரும் தன்மை உண்டு. இந்தியாவில் காணப்படும் பூச்சிகளில் ஒளி வெளிவிடும் பகுதி உடலின் அடிப் புறத்தில் உள்ளது. அடிப்புறம் எட்டுக் கண்டங்களாக இருக்கும். இவற்றுள் வால் பக்கத்திலுள்ள இறுதிக் கண்டமே ஒளிரும் உறுப்பாகும். சில இனங்களில் மார்பின் பக்கங்களிலுள்ள இரு புள்ளிகளிலிருந்து ஒளி தோன்றும். மின்மினியில் எப்படி ஒலி உண்டாகிறது தெரியுமா? ஒளிவிடும் தன்மையுள்ள சில வகை அணுக்கள் மின்மினியின் அடிப்பகுதி யில் இருக்கின்றன. பூச்சி சுவாசிக்கும் போது, உட்செல்லும் ஆக்சிஜனோடு இவை சேர்த்து ஆக்சிகரணம் அடைகிறது. அப்போது உண்டாகும் சக்தி ஒளியாக வெளிப்படுகிறது. மின்மினியில் தோன்றும் இந்த ஒளி மிகமிகக் குறைந்த அளவே வெப் பம் உடையது. அதனால் நாம் பூச்சியைத் தொடும்போது சூடு இருக்காது. சில மின்மினிகளின் ஒளி, செந்நிறமாக இருக்கும். மற்றும் மற்றும் சிலவற்றின் ஒளி பச்சை கலந்த நீலமாக இருக்கும். ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் ஒன்றையொன்று அறிந்துகொள்வதற்கு இந்த ஒளி உதவு கிறது. மின்மீன்கள் (Electric Fishes): சிலவகை மீன்களை நாம் தொட்டால் அவை மின் அதிர்ச்சியைக் கொடுக்கும்! இவை மின் மீன்கள் எனப்படும். மின்சாரத்தை உண்டாக்கும் ஆற்றுலுடைய இத்தகைய மீன்களில் சுமார் 50 வகை உள்ளன. இம்மீன்கள் பகை உயிர்களினின்றும் மின் அதிர்ச்சி மூலம் தம்மைக் காத்துக் கொள்கின்றன. தமக்கு இரையாகக்கூடிய உயிரினங்களைப் பிடிக்கவும் இவை மின் அதிர்ச்சியைப் பயன்படுத்துகின்றன. இவ் வதிர்ச்சியினால் அவற்றை நினைவிழக்கச் செய்தோ கொன்றே தின்பதுண்டு. மின்மீன்களில் முக்கியமானவை மின் மலங்கு (Electric eel), மின்திருக்கை (Torpedo or Ray fish), மின்கெளிறு (Cat fish) முதலிய வகைகளாகும். மின்மலங்கு தென் அமெரிக்காவில் ஆமெசான், ஆரினாக்கோ ஆகிய ஆறுகளிலும், பிரேசில், கயானா ஆகிய பகுதிகளில் சதுப்புக் குட்டைகளி லும் வாழ்கிறது. இது கமார் இரண்டு மீட்டர் நீளமிருக்கும். உடலின் நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு வால். வாஸ் நெடுகி லும் பக்கத் தசைகள் மின்னுறுப்புகளாக மாறி யிருக்கின்றன. மின்மீன்களில் மிகக் கடும் அதிர்ச்சியைத் தரக்கூடியது மின் மலங்கு தான். இதன் மின்சக்தி ஒரு குதிரை