பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற அளவுகளில் குறிப்பிடப்படுகின் றன. ஒரு பல்பு எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதை வாட் குறிக்கிறது. பல்பின் வாட் அதிக மாக ஆக அது தரும் ஒளியும் அதிகமாக இருக்கும். இன்று மின்சாரம் பல வழிகளில் பயன் படுகிறது. வீடுகளில் மின்விளக்குகள் பயன் படுகின்றன. நீரைச் சூடாக்கும் சாதனம், நீரைக் குளிர்விக்கும் எந்திரம், மின்சார அழைப்பு மணி, மின்சார ஆட்டுரல், மின் சாரச் சவரக்கத்தி முதலிய கருவிகளைப் பயன்படுத்துகிறோம். தந்தி, தொலைபேசி இவற்றிலும் மின்சாரம் பயன்படுகிறது. வயல்களுக்கு நீர் இறைக்க மின்சார மோட் டார் உதவுகிறது. சில ரெயில்கள், டிராம் கள் போன்றவை மின்சாரத்தால் இயங்கு கின்றன. தொழிற்சாலைகளில் எந்திரங்களை இயக்க மின்சாரம் பெருமளவில் பயன் படுகிறது. துணிகளைச் சலவை செய்யவும், குப்பைகூளங்களை அகற்றவும் மின்சார எந்திரங்கள் உள்ளன. மருத்துவத்தில் சிலவகை மனநோய்களை மின்சார அதிர்ச்சிச் சிகிச்சை மூலம் குணப்படுத்து கிறார்கள். முடக்குவாதத்திற்கும் மின் சாரச் சிகிச்சை அளிக்கிறார்கள். மின்சார சாதனங்களைக் கையாளும் போது கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மின்சார அதிர்ச்சியால் ஆபத்து நேரிடும். பார்க்க : மின்காந் தம்; மின்காந்தவியல்; மின்னாக்கிகள். மின்ப குப்பு (Electrolysis) : நீரில் மின்சாரத்தைச் செலுத்தினால் அதிலிருந்து ஆக்சிஜனும் ஹைடிரஜனும் தனித்தனியே பிரிந்துவிடும். மின்சாரம் பாய்வதால் நீரில் ரசாயன மாற்றம் நிகழ்கிறது. அதிலுள்ள பொருள்கள் பிரிக்கப்பட்டு விடுகின்றன. இதையே மின்பகுப்பு என்கிறார்கள். நீரைப்போன்று மின்சாரத் தால் பகுக்கக்கூடிய வேறு திரவங்களும் உண்டு. இவற்றை மின்பகு திரவங்கள் (Electrolytes) என்பார்கள். படத்தைப் பாருங்கள். மின்கலத் திலிருந்து வரும் கம்பிகள் நீரில் (மின்பகு திரவம்) அமிழ்த்தப்படுகின்றன. நீர்ப் பகுதியில் உள்ள இவற்றுக்கு மின்முனைகள் (Electrodes) என்று பெயர். இவை, மின்பகு திரவத்துடன் வினைப்படாத பொருளால் ஆனவை. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு சோதனைக் குழாய்களை மின்முனை களில் வைத்து மின்சாரத்தைச் செலுத் தினால், ஒரு குழாயில் ஆக்சிஜனும் மற்றொரு குழாயில் ஹைடிரஜனும் சேரும். ஆக்சிஜன் வெளியேறும் அளவைப் போல் இருமடங்கு அளவு ஹைடிரஜன் குப்பு பிரிவதைக் காணலாம். நீரில் இரண்டு பங்கு ஹைடிரஜனும் ஒரு பங்கு ஆக் சிஜனும் உள்ளன என்பதை இது காட்டு கிறது. இதேபோல் தாமிர சல்பேட்டுக் கரைசலை மின்பகுப்பு செய்தால், தாமிரம் (செம்பு ) தனியே பிரிந்து ஒரு மின்முனையில் படியும். இந்த முறையைப் பின்பற்றி டேவி (த.க.) என்ற விஞ்ஞானி சோடியம், பொட் டாசியம் ஆகிய தனிமங்களை அவற்றின் கூட்டுப்பொருள்களிலிருந்து பிரித்தெடுத் தார். அலுமினியம் அதன் தாதுப்பொருளி லிருந்து இந்த முறையில் தான் பிரித்தெடுக் கப்படுகிறது. பாரடே (த.க.) என்ற விஞ்ஞானி மின்பகுப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்து சில விதிகளை வகுத் துள்ளார். மின்பகுப்பு இன்று பல வழிகளில் பயன் படுகிறது. தனிமங்களை அவற்றின் கூட்டுப் பொருள்கள், தாதுக்கள் இவற்றிலிருந்து பிரித்தெடுக்கவும், உலோகங்களைத் தூய் மைப்படுத்தவும் உதவுகிறது. மின்முலாம் பூசுதல் (Electroplating) முக்கியமான சிறு தொழில்களில் ஒன்று. இது மின்பகுப்பை அடிப்படையாக வைத் துச் செய்யப்படுகிறது. செம்பு, பித்தளை, இரும்பு போன்றவற்றாலான பொருள் களுக்கு நிக்கல், குரோமியம், வெள்ளி, தங்கம் முதலியவற்றால் பூச்சுக் கொடுக் கிறார்கள். முழுவதும் தங்கத்தாலான நகையின் விலை அதிகமாயிருக்கும். வெள்ளி, பித்தளை, செம்பு ஆகியவற்றில் நகை செய்து அதன்மீது தங்கப் பூச்சுக் கொடுத்துவிட்டால் அது பார்ப்பதற்குத் தங்க நகை போன்றே நீண்ட நாட்களுக் குத் தோற்றமளிக்கும். விலையும் மலிவாயிருக்கும். இதேபோல் கரண்டி, கத்தி முதலியவற்றுக்கு வெள்ளி, நிக்கல் பூச்சுக் கொடுக்கிறார்கள். மோட்டார் வண்டிகள், சைக்கிள் முதலியவற்றில் சில பகுதிகள் பளபளவென்று இருப்பதற்குக் காரணம் அவற்றுக்குக் கொடுக்கப்பட் டுள்ள குரோமியப் பூச்சுதான்.