பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள் க இலக்களஞ்சியம்

மழை: மழை என்றாலே உங்களுக் குக் கொண்டாட்டந்தான். காகிதத்தில் கப்பல் செய்து அதை மழை நீரில் ஓடவிட் டுப் பார்ப்பதில் உங்களுக்குப் பெரு மகிழ்ச்சி அல்லவா? விளையாடுவதற்கு மட்டுமல்ல; இவ்வுலகில் மக்களும், விலங்கு கள், பறவைகள், தாவரங்கள் முதலிய எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாது தேவைப்படுவது மழை.

ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீர், சூரிய வெப்பத்தால் ஆவியாகிறது. இது காற்றிலுள்ள வாயுக் களுடன் சேர்ந்து, காற்றினால் வானிற்குக் கொண்டுசெல்லப்படுகிறது. மேலே செல் லும் காற்று குளிர்ச்சியடைந்துகொண்டே போகும். இவ்வாறு குளிர்ந்து கொண்டே போனால் ஒரு வெப்பநிலையில் இது 'நீர்த் தூசிகள்' (Water dust) எனப்படும் சிறு சிறு நீர்த் திவலைகளாக மாறும். இத்தகைய வெப்பநிலையைப் 'பனிநிலை' (Dew point) என்பார்கள். நீர்த் திவலைகள் நிறைந்த காற்றைத்தான் 'மேகம்' என்கிறோம். மேகம் மேலும் குளிர்ச்சியடைந்தால், அதிலுள்ள நீர்த் திவலைகள் பல ஒன்று திரண்டு, மழைத் துளிகளாக விழும். இவ்வாறுதான் மழை உண்டாகிறது.

உலகிலுள்ள பல்வேறு இடங்களின் வெப்பநிலை, உயரம், காற்றின் அழுத்தம், காற்றின் ஈரப்பதன், கடலிலிருந்து தொலைவு இவற்றைப் பொறுத்து ஆங்காங்கே மழையின் அளவு வேறுபடும். மிகுந்த வெப்பம், மிகுந்த ஈரப்பதன், குறைந்த காற்றழுத்தம் இவற்றாலும், மலைகள் கடலுக்கு அருகில் இருப்பதைப் பொறுத்தும் மழையின் அளவு மிகுதி யாகும். குறைந்த வெப்பம், குறைந்த ஈரப் பதன், மிகுந்த காற்றழுத்தம் இருந் தாலும் கடலுக்குத் தொலைவாக இருந் தால் மழை குறையும். இந் நிலைமைகள் இடத்திற்கு இடம் மாறுபடுவதால் மழையின் அளவும் வேறுபடுகிறது. ஓரிடத்தில் பெய்யும் மழையை அளவிட 'மழைமானி' (Rain gauge) என்னும் கருவி பயன்படுகிறது. மழை பெய்த அளவை அங்குலம் அல்லது சென்டிமீட்டரில் அளக் கிறார்கள்.

மழைமானியும் அளவு ஜாடியும்