பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரமண மகரிஷி சொல்வார்கள். இந்த மாதம் இவர்களுக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இந்த மாதத்தில்தான் முஸ்லிம்களின் வேத நூலாகிய குர் ஆனின் (த.க ஒரு பகுதி முகம்மது நபிக்குக் (த.க.) கடவுளின் தூதரால் அருளப்பெற்றது. அதனால் முஸ்லிம்கள் இம் மாதத்தைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மாதம் முழுவதும் பகலில் உண்ணா நோன்பு இருப் பது முஸ்லிம்களின் கடமையாகும். இம் மாதத்தில் பிறை தெரிந்த பின்னர் முஸ்லிம்கள் தொழுகைக்காக மசூதியில் கூடுவர். அங்கே தொழுகை நடத்துபவர் இமாம் எனப்படுவார். குர் ஆன் வேதத்திலிருந்து நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாக இவர் ஓதுவார்: இருபத்தேழாம் நாள் இரவில் இது முடிவு பெறும். இம் மாதத்தில் இறுதிப் பத்து இரவுகளுள் ஒன்று புண்ணிய இரவாகும். இதை 'லைலத்-உல்-கதர்' (Lailat - ul-qadr) என்பர். இந்த இரவில்தான் தேவதூதர் கள் அமைதி உண்டாகுமாறு பொழுது விடியும் வரை பிரார்த்தனை செய்வார்கள் என்று குர் ஆனில் குறிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களிலும் மசூதியில் தொழுகை யிலும் குர் ஆன் ஓதுவதிலும் தங்கள் காலத்தைக் கழிப்பர். ரமண மகரிஷி (1879-1950): இந்திய நாட்டில் எண்ணற்ற முனிவர் களும் மகான்களும் வாழ்ந்திருக்கினர்கள். அவர்களில் ஒருவர் ரமண மகரிஷி. 19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தோன்றிய சிறந்த ஞானி இவர். இவர் இராமநாதபுர மாவட்டத்தி லுள்ள திருச்சுழி எனும் ஊரில் 1879 டிசம்பர் 30-ல் பிறந்தார். தந்தை சுந்தரம் ஐயர்; தாய் அழகம்மாள். இவரது இயற் பெயர் வேங்கடராமன். திருச்சுழி, திண் டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் இவர் கல்வி பயின்றார். இவர் உயர்நிலைப் பள்ளி யில் நான்காம் படிவம் (9ஆம் வகுப்பு) வரை படித்தார். இளமை முதலே இவர் மனத்தில் திருவண்ணாமலை பற்றிய நினைவு இருந்தது. பெரியபுராணம் படித்ததன் மூலம் இவருடைய உள்ளத்தில் பக்திநெறி வளரலாயிற்று. சிலகாலம் மதுரை சுந்த ரேசுவரர் கோயிலில் இவர் தியானம் செய்து வந்தார். தம் பதினேழாம் வயதில் ஞானம் பெற்றுத் துறவு மேற்கொண்டு திருவண்ணாமலையை அடைந்தார். அங் குள்ள ஆயிரக்கால் மண்டபம், பாதாள லிங்கக் குகை முதலிய இடங்களில் சில ஆண்டுகள் தம்மை மறந்த நிலையில் தியானம் செய்துவந்தார். 1907-ல் ரமண மகரிஷி 77 கணபதி சாஸ்திரி என்பவர் இவரைக் குருவாகக் கொண்டார். இவரைப் "பகவான்" என்றும் "ரமண மகரிஷி" எனவும் போற்றினார். பின்னர் அனைவரும் இவரைப் பகவான் ரமண மகரிஷி" என்றே அழைக்கலாயினர். 1922-ல் மாமரக் குகை, பவளக் குன்று, விருபாட் சக் குகை முதலிய இடங்களில் தங்கிப் பின்னர் கந்தாசிரமத்தில் இவர் நிலையாகத் தங்கினார். இவருடைய அன்னையும் துறவு பூண்டு இவருடனேயே வசித்து வந்தார். தம் அன்னை காலமானதும் அவருக்கு ஒரு சமாதி அமைத்து அங்கேயே வாழலானார். இந்தச் சமாதியைச் சுற்றி லும் ஒரு பெரிய ஆசிரமம் வளர்ந்தது. இந்தியாவின் பகுதிகளிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் ஏராளமான பக் தர்கள் இங்கு வந்து ரமண மகரிஷியின் உபதேசத்தைப் பெற்றனர். பல அருணாசல துதி, பஞ்சகம், உபதேச உந்தியார், உள்ளது நாற்பது முதலிய நூல்களை ரமண மகரிஷி இயற்றியுள்ளார். விவேக ஆதி சங்கரரின் சூடாமணி ஆத்மபோதம் என்ற நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். "நான் யார்" எனும் உபதேச நூலில், "உயிர்கள் துன்ப மின்றி எப்போதும் இருக்கத் தன்னைத் தான் அறிதல்வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதை இவர் தம் வாழ்க்கையில் தாமே வாழ்ந்து காட்டினார். இவர் 1950 ஏப்ரல் 14-ல் காலமானார். சுகமாக