பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 ரப்பர் - ரம்சான் ரப்பரால் செய்யப்பட்ட சில பொருள்கள் கள். இவ்வாறு சேகரித்த பாலைப் பெரிய தொட்டிகளில் நிரப்புவார்கள். ரப்பரைப் பிரித்தெடுப்பதற்கு நீர்த்த அசிட்டிக அமிலத்தையோ பார்மிக அமிலத்தையோ அதில் சேர்ப்பார்கள். அப்பொழுது ரப்பர் குழம்பாகி ஏடுபோல மேலே படியும். நீரை வடித்துவிட்டு இதை உலர விடுவார்கள். ரப்பர் மெல்லிய விரிப்பு போலக் (Sheets) கிடைக்கிறது. இதையே ஏற்றுமதி செய்து வந்தனர். ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்து வலு வாக்கும் (Vulcanization) முறையைச் சார் லஸ் ரூட்யர் கண்டுபிடித்தபின் மீள்சக்தி (Elasticity), வலிமை, தேய்வின்மை, உறுதி முதலிய தன்மைகள் வாய்த்த ரப்பரை உருவாக்கினர். அதிக அளவில் கந்தகத் தைச் சேர்த்துச் சூடேற்றினால் எபனைட்டு ரப்பர் மரத்திலிருந்து பால் சேகரித்தல் (Ebonite) என்னும் மிகக் கடினமான ரப்பர் கிடைக்கும். இது மின்சாரத்தைக் கடத்தாது. எனவே மின்சாரக் காப்பிடு பொருளாக இது பயன்படுகிறது. கடற்பஞ்சு போன்ற நுரை ரப்பரை (Foam) உற்பத்தி செய்து மெத்தை, தலையணை முதலியவற்றைத் தயாரிக்கிறார் கள். மிக மெல்லிய ரப்பரிலிருந்து பலூன், கையுறை போன்ற பொருள்களைச் செய் கிறார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின்போது மலேயா, இந்தோ-சீனா முதலிய பகுதிகள் ஜப்பானியர் வசமாகியதால் ஐரோப்பிய நாடுகளுக்கு ரப்பர் கிடைக்கவில்லை. எனவே அமெரிக்காவும், ஜெர்மனியும், ரஷ்யாவும் ரசாயனப் பொருள்களிலிருந்து செயற்கை முறையில் ரப்பர் தயாரிக்கத் தொடங்கின. இன்று செயற்கை ரப்பர்த் தொழிலும் பெரும் வளர்ச்சியடைத் துள்ளது. நமக்குத் தேவையான பல பொருள் களைச் செய்ய ரப்பர் இன்று பயன்படு கிறது. காலணிகள், மழைக்கோட்டு, மருத் துவ மனைகளுக்குப் பயன்படும் சாதனங் கள் முதலியவற்றை இதைக் கொண்டு செய்கிறார்கள். மோட்டார் வண்டிகள், சைக்கின் மற்றும் பல ஊர்திகளுக்குத் தேவையான ரப்பர் டயர்-டியூப் பெருமள வில் உற்பத்தியாகின்றன. ரப்பரால் பந்து கள், பலூன்கள் முதலிய விளையாட்டுப் பொருள்களும் செய்கிறார்கள். ரப்பர்க் குழாய்கள் இன்று பல வகைகளில் பயன் படுகின்றன. ரம்சான் (Ramzan) : இஸ்லாம் (த.சு.) மதத்தினருக்கு இஸ்லாமிய ஆண்டுக் கணக் கின்படி ரம்சான் என்பது ஒன்பதாவது மாதம் ஆகும். இதை ரமதான் என்றும்