பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரண சிகிச்சை - ரப்பர் புண்களைக் கழுவினார்கள். நோய்க் கிருமி கள் சேர்ந்தபின் கொல்வதைவிட அவை சேராமல் தடுப்பதே சிறந்தது அல்லவா? அதனால் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் முதலியவற்றில் தோய்க்கிருமிகள் இல்லாத படி செய்யும் தொற்றுத் தடைமுறையைக் (Aseptic surgery) கையாண்டனர். சென்ற நூறாண்டுகளில் அறுவைச் சிகிச்சை மிக வேகமாக வளர்ந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் புதுப்புதுக் கருளி கள் தோன்றியுள்ளன. வலிநீக்கி மருந்து களும், வலி நீக்கும் முறைகளும் வளர்ந் திருக்கின்றன . நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்காமல், அறுவை செய்ய வேண்டிய இடத்தை மட்டும் உணர்ச்சியற் றுப் போகச் செய்யும் வகையில் ஊசி மருந்து கொடுக்கும் முறையும் கண்டுபிடிக் சுப்பட்டிருக்கிறது. இதயம், நுரையீரல் மூளை, வயிறு போன்ற தனித்தனி உறுப்பு களில் உண்டாகும். நோய்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்வதில் வல்லுநர் கள் உள்ளனர். வெளியே தெரியும்படியான முகம், கைகள் முதலிய உறுப்புகளில் காயத்தினால் தசை சேதமடையலாம். பார்ப்பதற்கு அது அழகாக இராது. மிகுதியாக ஆகையால் தொடை போன்ற பகுதியிலிருந்து சிறிது தசையை அறுத்துக் காயம்பட்ட இடத் தில் ஒட்டவைத்துச் சீர்செய்யும் சிகிச்சை முறையும் (Plastic surgery) இன்று செய்யப் படுகிறது. ஒருவரின் இதயம் பழுதுபட்டுச் சரியாக இயங்காமல் போகலாம். அகற்றிவிட்டு இறந்துபோன வேருெரு வரின் இதயத்தை அவர் இறந்த சில நிமிடங்களுக்குள் எடுத்து இதய நோய் உள்ளவருக்குப் பொருத்திவிடுகிறார்கள். இன்றைய இது அறுவைச் தசை முறையின் சாதனையாகும். உள்ள அதை சிகிச்சை இன்று ஒவ்வொரு மருத்துவ மனையிலும் எல்லா வசதிகளும் உடைய அறுவைச் சிகிச்சை அறை உள்ளது. அறுவைச் சிகிச்சை செய்யவேண்டிய நோயாளியை முதலில் அதற்குத் தயார் செய்வார்கள். அறுவை 49 ய இடத் செய்யவே ண் தைச் சுத்தம் செய்வர். மருத்துவரும் மருத்துவத் தாதியரும் தங்கள் கைகளை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டுக் கையுறை அணிவர். தங்கள் உடையின் மீது தொற்று நீக்கிய (sterilized) உடையை அணிந்து கொள்வர். தங்கள் மூச்சு மூலமும், பேசுகையில் வாய் வழியாகவும் நோயாளிக் குக் கிருமிகள் செல்லாதவாறு அவர்கள் முகமூடி அணிந்துகொள்வார்கள். அறுவைக்குப் பயன்படும் கருளிகளையும் தொற்று நீக்குவர். அறுவைச் சிகிச்சை அறைக்கு நோயாளியைக் நோயாளியைக் கொணர்ந்து 75 கட்டிலில் படுக்கவைத்து, வலி நீக்கி வாயுவைச் சுவாசிக்கும்படி செய்வர். நோயாளி நினைவை இழப்பார். அதன்பின் மருத்துவர் அனுவைச் சிகிச்சையை நடத்து வார். ரப்பர்: பென்சிலாஸ் எழுதும்போது பிழை நேர்த்தால் ரப்பரினால் அழிக்கிறீர் களல்லவா? இந்த ரப்பர் எப்படிக் கிடைக் கிறது தெரியுமா? ஒருவகை மரத்தின் பாலிலிருந்துதான் ரப்பர் தயாரிக்கிறார் கள். ஹெலேயா (Heves) என்பது இம் மரத் தின் பெயர். தமிழில் இதை ரப்பர் மரம் என்றே குறிக்கிறோம். 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொலம்பஸ் (த.க.) அமெரிக்காவுக்கு இரண்டாவது முறை சென்றபோது அங்கு வாழ்ந்துவந்த அமெரிக்க இந்தியர்கள், அள்ளி மேலே எழுந்து கீழே விழுந்து ஓடும் பந்துகளை வைத்து விளையாடுவதைக் கண்டார். ஆனால் 18ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பாவில் ரப்பர் வாணிகப் பொருளாக வழங்கலாயிற்று. ஐரோப்பா வில் ரப்பர் மரத்தைப் பயிராக்கவும் தொடங்கினர். பென்சிலால் எழுதியதை ரப்பரால் அழிக்க முடியும் என்று பிரீஸ்ட்லி (த.க.) என்ற ஆங்கில விஞ்ஞானி கண்டுபிடித் தார். 1823ஆம் ஆண்டில் ஸ்காட்லாந் தைச் சேர்ந்த சார்லஸ் மாக்கின்டோஷ் Charles Macintosh) என்பவர் ரப்பரைப் பயன்படுத்தி மழைக் கோட்டு தயாரித் தார். பின்பு 1839-ல் சார்லஸ் குட்யர் (Charles Goodyear) என்ற அமெரிக்கர் கத்த கத்தை ரப்பருடன் கலந்து சூடேற்றினால் வலுவுள்ள தரமான ரப்பர் கிடைக்குமென பிசுபிசுப்பு அறிந்தார். இந்த ரப்பர் இல்லாமலும் உதிர்ந்து பொடியாகாமலும் இருந்தது. இதன் பிறகு ரப்பர்த் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்தது. தொடக்கத்தில் தென் அமெரிக்காவில் ஆமெசான் ஆற்றுப் பகுதிகளிலுள்ள காடு களிலிருந்துதான் சப்பர் கிடைத்தது. பின்னர் இம்மரத்தின் விதைகளை இங்கிலாந் துக்கு எடுத்துச் சென்று அங்கு பயிரிட்ட னர். அங்கிருந்து இந்தியா, பர்மா, மலேசியா, இந்தோனீசியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு ரப்பர் பரவியது. இங்கெல்லாம் பெரிய அளவில் ரப்பர் தோட்டங்கள் ஏற்பட்டன. ஈரமும் வெப்ப மும் மிருந்த பகுதிகளிலேயே ரப்பர் மரம் நன்கு செழித்து வளரும். இம் மரம் 18 முதல் 30 மீட்டர் வரை உயரமுள்ளது. இது 200 ஆண்டுகள் வாழும். அடிமரத்தில் பட்டையைக் கீறிவிட்டு வடியும் பாலைக் கோப்பைகனில் பிடிப்பார்