பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 ரசாயன வினை - ரண சிகிச்சை ரசாயன வினை: இரும்பையும் சுந் தகத்தையும் (Sulphur) பொடி செய்து, அவற்றை ஒரு சோதனைக் குழாயிலிட்டு நன்கு சூடுபடுத்தினால், இரும்பு சல்பைடு கிடைக்கும். இது ஒரு ரசாயன வினை. இரும்பு சல்பைடு முற்றிலும் புதிய தன்மை களைக் கொண்ட ஒரு பொருள். அதில் இரும்பும் உள்ளது; கந்தகமும் உள்ளது. ஆனால் இரும்பின் தன்மைகளோ, கந்தகத் தின் தன்மைகளோ அதற்கு இருக்காது. ஏற்கெனவே உள்ள பொருள்களிலுள்ள அணுக்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படு வதாலேயே புதிய பொருள்கள் உண்டா கின்றன. இது ' ரசாயன மாற்றம்' எனப் படும். இந்த மாற்றம் வெப்பத்தினால் ஏற் பட்டது. வெப்பம், ஒளி, ஒளி, மின்சாரம் முதலிய சக்திகளால் பொருள்கள் மாற்ற மடைந்து புதிய பொருள்கள் உண்டாவதே ரசாயன வினையாகும். வெப்பத்தால் ஏற்படும். மற்றொரு ரசாயன வினையைப் பார்ப்போம். ஒரு சோதனைக் குழாயில் சிறிதளவு பாதரச ஆக்சைடைப் போட்டுச் சூடுபடுத்தினால் சிறிது நேரத்தில் வெப்பத்தினால் பாதரச ஆக்சைடில் உள்ள ஆக்சிஜன் தனியே பிரிந்து வாயுவாக வெளியேறிவிடும். பாத ரசம் எஞ்சி நிற்கும். ஹைடிரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த ஒரு கூட்டுப்பொருள்தான் நீர் என்பதை நாம் அறிவோம். நீரினூடே மின்சாரத் தைச் செலுத்தினால் அதிலிருந்து ஹைடிரஜனும் ஆக்சிஜனும் தனித்தனியே பிரிந்துவிடும். இதற்கு மின்பகுப்பு (த.க.) என்று பெயர். இதுவும் ஒரு ரசாயன வினையே ஆகும். பார்க்க : கூட்டுப் பொருள்; தனிமம். ரண சிகிச்சை (Surgery) : உடம்பில் கட்டி உண்டானால், வலி தாங்க முடியாது. ஆனால் அந்தக் கட்டியைப் பக்குவமாக அறுத்துச் சிகிச்சை செய்து விட்டால் வலி நீங்கி விடும். இவ்வாறு அறுவை முறையால் நோய் நீக்குவதற்கு ரண சிகிச்சை என்று பெயர். குறடு இந்தியா, எகிப்து, பாபிலோனியா, கிரீஸ் முதலிய நாடுகளில் பழங்காலத் திலேயே அறுவைச் சிகிச்சை செய்திருக் கிறார்கள். அவர்களுள் இந்தியர்கள்தான் அறுவைச் சிகிச்சையில் மிகவும் தேர்ந்தவர் களாக விளங்கினர். கத்தரி, ஊசி, போன்ற இக்காலக் கருவிகளை அன்றைய இந்திய மருத்துவர்கள் பயன்படுத்தினார் கள். உடல் உறுப்புகளை நீக்குதல், கண்ணில் விழும் படலத்தை (Cataract) அகற்றுதல் போன்ற மிக நுட்பமான அறுவைச் சிகிச் சைகளையும் அன்றே அவர்கள் செய்தனர். - பல்வேறு ரண சிகிச்சைக் கருவிகள் விஞ்ஞானத்தின் மூலம் மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் அறுவைச் சிகிச்சை முறைகளும் வேகமாக வளர்ச்சி யடைந்தன. நைட்ரச ஆக்சைடு, குளோ ரோபாரம் முதலிய வாயுக்களைச் சுவாசிப் பவர்களுக்கு மயக்கம் ஏற்படும். சிறிது நேரம் உணர்ச்சி வலி இருக்காது. தெரியாது. பின்னர் அவர்கள் எவ்விதத் தீங்குமின்றி எழுந்துவிடுவார்கள். இந்த மயக்க மருந்துகளில் (த.க.) ஒன்றைக் கொடுத்து நோயாளியை மயக்கமுறச் செய்து, நோயாளிக்குத் தொல்லையின்றி அறுவைச் சிகிச்சையைச் செய்தார்கள். இவ்வாறு அறுவைச் சிகிச்சை செய்யும் போது, நோயாளி மயக்கத்தால் ஆடாமல் அசையாமல் இருப்பார். அறுவையினால் ஏற்படும் வலி நோயாளிக்குத் தெரியாது. அதனால் மருத்துவர்கள் எளிதாக அறுவைச் சிகிச்சை செய்ய முடிந்தது. வலிநீக்கி மயக்க மருந்துகள் பயனுக்கு வந்த பிறகும் அறுவைச் சிகிச்சைக்குப் பின் புண் ஆருமல் நோயாளிகள் இறந் தார்கள். முதலில் இதற்குக் காரணம் தெரியாமலிருந்தது. பாஸ்ட்டர் (த.க.) என்னும் பிரெஞ்சு விஞ்ஞானி 1860-ல் பெரும்பாலான நோய்கள் மிக நுண்ணிய நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். அறுவைச் சிகிச்சை செய்வதால் ஏற்படும் புண்கள் ஆருமல், அதில் நோய்க் கிருமிகள் சேருவதே நோயாளிகள் இறப்பதற்குக் காரணம் என்பதை லிஸ்ட்டர் என்ற ஆங்கில விஞ்ஞானி 1865-ல் கண்டறித் தார். எனவே, புண்களில் சேரும் நோய்க் கிருமிகளைக் கொல்வதற்குக் கார்பாலிக அமிலம் (Carbolic acid) என்னும் நச்சுக் கொல்லி (த.க.) மருந்தைக் கொண்டு