பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரசாயனம் இன்று பயன்பட்டு வருகின்றன. இளவ யாவும் ரசாயன ஆராய்ச்சியால் கிடைக் சுப் பெற்றவையே. ரசாயனம் மிகப் பழமையான ஒரு விஞ்ஞானத் துறை. ஒரு பொருளின் உள்ளமைப்பைத் தெரிந்துகொள்வதற் கும், ஏற்கெனவே உள்ள வெவ்வேறு பொருள்களைச் சேர்த்துப் புதிய பொருள் களை உண்டாக்குவதற்குமான முயற்சியில் பண்டைக்கால மக்கள் ஈடுபட்டிருந்தார் கள். வரலாற்றுக்கு முற்பட்ட காலத் திலேயே மக்கள் சில உலோகங்களைப் பற்றி யும், தாவரங்களிலிருந்து மருந்துகள் தயாரிப்பதைப் பற்றியும் அறிந்திருந் தனர். இன்று உலகில் 103 தனிமங்கள் (த.க.) இருக்கின்றன. இவற்றில் சில வற்றைப் பழங்காலத்திலேயே பயன்படுத்தி யுள்ளனர். காலப்போக்கில் அறிவு வளர வளர, அவற்றின் தன்மைகளை விரிவாக அறிந்து நன்கு பயன்படுத்திப் புதிய, பயனுள்ள கூட்டுப்பொருள்களைத் (த.க.) ரசாயன சோதனைக் கூடங்களில் உள்ள பல்வேறு சாதனங்கள் 0000 0000 1000 000 73 தயாரித்தனர்.மேலும் பல தனிமங்களைச் கண்டுபிடித்தனர். சென்ற சில நூறு ஆண்டுகளில்தான் ரசாயனம் ஒரு தனி அறிவுக் கலையாக வளர்ந்தது. பாரசெல்ஸஸ், பாயில், பிரீஸ்ட்லி, கேவண்டிஷ், லவாய்சியே, மெண்டலீபு. கியூரி முதலிய விஞ்ஞானி கள் ரசாயன ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுப் பல புதிய உண்மைகளைக் கண்டு பிடித்தனர். இன்று ரசாயனம் மிக விரிவான ஒரு துறையாக வளர்ந்துள்ளது. இதில் பல பிரிவுகளும் உள்பிரிவுகளும் உள்ளன. தனிமங்களில் ஒன்று கார்பன். கார்பன் மற்றும் அதன் கூட்டுப்பொருள்களைப் பற்றி மட்டும் கரிம ரசாயனம் (Organic Chemistry) என்ற தனிப் பிரிவு உள்ளது. ஏனையவற்றைப் பற்றியது சரியற்ற ரசா யனம் (Inorganic Chemistry). பௌதிக முறை களையும் தத்துவங்களையும் அடிப்படை யாகக் கொண்டது பௌதிக ரசாயனம் (Physical Chemistry). இதில் மின் ரசாயன வியல் (Electro Chemistry), ஒளி ரசாயனவியல் (Photo Chemistry) எனச் சில உள்பிரிவுகள் உண்டு. உயிரியல் (த.சு.) என்னும் விஞ் ஞானத்துறை, உயிருள்ளனவற்றின் தன்மை, வரலாறு, வளர்ச்சி முதலிய வற்றை ஆராய்வதாகும். இவற்றினுள் நிகழும் ரசாயன மாறுதல்களைப் பற்றி ஆராயும் ரசாயனப் பிரிவு உயிரியல் ரசாயனம் (Bio-Chemistry) ஆகும். இந்த நூற்றாண்டில் தோன்றி வளர்ந்துவரும் முக்கியமான ஒரு ரசாயனப் பிரிவு, புளி ரசாயனவியல் (த.க.) ஆகும். இது பூமியிலுள்ள பாறைகளிலும் தாதுக்களி லும் உள்ள தனிமங்களைப் பற்றியும், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பூமியில் மட்கி மாறுதல் அடைவதைப் பற்றியும் ஆராய்கிறது. இன்று பள்ளிகளிலும் ரசாயனப் பிரிவில் சோதனைக்கூடங்கள் (Laboratories) உள்ளன. பெரிய தொழிற்சாலைகளில் தனி ரசாயன சோதனைக்கூடங்கள் உண்டு. அங்கு தயா ரிக்கும் பொருள்களை அவர்களே சோதனை செய்கிறார்கள். உற்பத்தி செய்யும் பொருள்களின் தரத்தை உயர்த்தவும், புதிய தயாரிப்புகளில் ஈடுபடுமுன் அவற்றை நன்கு சோதனை செய்துபார்க்க வும் தொழிற்சாலைகளில் ரசாயன சோதனை உதவுகிறது. இன்று எல்லாத் துறை கனிலுமே ரசாயன ஆராய்ச்சி இன்றியமை யாததாக விளங்குகிறது. பார்க்க : அமிலங்களும் காரங்களும்; உலோகங்கள்: கூட்டுப்பொருள்; தனிமம்; தாதுக்கள்; புவிரசாயனவியல்; மூலக் கூறு; ரசாயன வினை; வாயு.