பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 யூகோஸ்லாவியா ரசாயனம் கிடைக்கும். இதைச் சுத்தம் செய்து மருந்து தயாரிப்பார்கள். தைலம் காய்ச்சு வது நீலகிரியெங்கும் குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது. நீலகிரித் தைலம் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பூச்சிகொல்லி மருந்துகள், சோப்பு, வாசனைத் தைலம் முதலியன தயாரிக்கவும் இது பயனாகிறது. யூகோஸ்லாவியா : ஐரோப்பாக் கண் டத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு குடியரசு நாடு யூகோஸ்லாவியா. வடக் இல் ஆஸ்திரியா, ஹங்கேரி நாடுகளும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா நாடு களும் தெற்கில் கிரீஸ், ஆல்பேனியா நாடு களும் மேற்கில் ஏட்ரியாட்டிக் கடலும் இதன் எல்லைகளாக உள்ளன. இந் நாட் டின் பரப்பு 2,56, 400 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை 2 கோடி (1969). தலை நகரம் பெல்கிரேடு (Belgrade) இந் நாட்டின் மேற்கு, தெற்குகிழக்குப் பகுதிகள் மலைப்பாங்கானவை. வட பகுதி சமவெளி. மலைத்தொடரில் சாவா, டிராவா.மோராவா முதலிய ஆறுகள் தோன்றி, சமவெளியில் பாய்ந்து டான்யூப் ஆற்றுடன் ஒன்று சேர்கின்றன. மலைச் சரிவு களில் அடர்ந்த காடுகள் உள்ளன. சமவெளி மிகச் செழிப்பானது. கோதுமை, சோளம், பார்லி, கரும்பு, உருளைக்கிழங்கு முதலியன பயிராகின்றன. மேற்கில் மலைத் தொடருக்கும் ஏட்ரியாட்டிக் கடலுக்கு மிடையே குறுகிய சமவெளி உள்ளது. இங்குப் புகையிலை மிகுதியாக விளைகிறது. திராட்சைத் தோட்டங்களும் ஒலிவ மரங் களும் அதிகம். ஆப்பிள், அத்திப்பழங்களும் விளைகின்றன. மலைப் பகுதியில் ஆடு வளர்த் தல் மிக முக்கியமான தொழில், குதிரை கள், பன்றிகள் முதலியனவும் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. மேற்குக் கட டற் கரையை யொட்டி ஏராளமான சிறு தீவுகள் உள்ளன. உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு இவை ஏற்றவை. இந் நாட்டில் தாதுவளம் மிகுதி. இரும்பு, காரீயம், தாமிரம், தங்கம், வெள்ளி, குரோமியம், அலுமினியம் முதலிய உலோகங்களும், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு (த.க.) முதலியனவும் கிடைக்கின்றன. போர் (Bor) என்னுமிடத்திலுள்ள தாமிரச் சுரங்கம் ஐரோப்பாவிலே பெரியது. டிரெய்கா (Trepcha) என்னுமிடத்திலுள்ள சுரங்கத்தில் காரீயம், துத்தநாகம். வெள்ளி முதலிய பல உலோகங்கள் கிடைக்கின்றன. தாதுவளம் மிகுந்திருப்ப தால் பெரிய தொழிற்சாலைகள் பல அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான கோதுமை யூகோஸ்லாவியா ஆஸ்திரியா சோளம் திராட்சை பார்லி ஹங்கேரி ஒலிவ கனி இரும்பு ருமேனியா டிராவர், ஆறு உன் பெல்கிரேடு ஏட்ரியாட்டிக் கடல் பான்பூம் ஆறு புகையிலை ஆடு காரீயம் செம்பு நிலக்கரி (பல்கேரியா கிரீஸ் தொழிற்சாலைகள் யாவும் அரசாங்கத்திற் குச் சொந்தமானவை. இந் நாட்டில் சர்பியர், குரோவாட்டு கள், ஸ்லோவீன்கள் முதலிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர் களுடைய சமயமும் மொழியும் வேறுபட் டுள்ளன. எனினும் இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு. இந் நாடு அரசர் ஆளும் முடியரசு நாடாக இருந்தது. யுத்தத்திற்குப் பிறகு குடியரசாகியது. இங்குப் பொதுவுடைமை ஆட்சி நடைபெறுகிறது. ரசாயனம்: நாம் நாள்தோறும் தண்ணீரைப் பல வழிகளில் பயன்படுத்து கிறோம். தண்ணீர் ஒரு தனிப்பொருள் அல்ல. அது ஹைடிரஜன் வாயுவும் ஆக் சிஜன் வாயுவும் சேர்ந்த ஒரு கூட்டுப் பொருள். அதுபோல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளின் தன்மைகள் அதாவது நிறம், மணம், சுவை, உருகுநிலை, கொதிநிலை, ஆலியாகும் நிலை, மற்றப் பொருள்களுடன் சேருவதால் உண்டாகும் விளைவுகள் மற்றும் அதன் பயன்கள் என்பனவற்றைப் பற்றி ஆராய்வது ரசாயனம். இயற்கையில் கிடைக்கும் பொருள் களைக்கொண்டு, பயனுள்ள புதிய பொருள்களைத் தயாரிப்பதும் ரசாயனத் துறையின் குறிக்கோள் ஆகும். நைலான், டெரிலீன் முதலிய துணிவகைகள், கண்ணாடி, பிளாஸ்ட்டிக்குகள் (த.க.). பல வகை சோப்புகள். செயற்கை மணிகள், மருந்துகள், செயற்கை உரங்கள் முதலான பல பொருள்கள் பல்வேறு துறைகளில்