பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யுரேனியம் - யூக்கலிப்ட்டஸ் யுரேனியத்தை அதன் தாதுப்பொருள் கள் சிலவற்றிலிருந்து பிரித்தெடுக்கிறார் கள். யுரேனியம் அடங்கிய தாதுக்களில் பிட்ச் பிளெண்டு (Pitch blende) முக்கிய மானது. இது கருநிறம் கொண்டது; இதில் யுரேனியத்தைத் தவிர காரீயம், இரும்பு, செம்பு, வெள்லி கந்தகம் முதலிய தனிமங்களும் காணப்படும். அமெரிக்கா, கானடா, தென் ஆப்பிரிக் காக் குடியரசு, காங்கோ, செக்கோஸ்லோ வாக்கியா ஆகிய நாடுகளில் இது பெருமளவில் கிடைக்கிறது. இந்தியாவில் பீகார், மைசூர், கேரளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் யுரேனிய தாதுக்கள் கிடைக்கின்றன. யுரேனியம் அடங்கிய தாதுப்பொருளை அரைத்து நன்றாகப் பொடியாக்கி உலை சுனில் இட்டு வறுக்கிறர்கள். வெப்பத் தால் கந்தகம், கரி, ஆர்சனிக் முதலியவை வெளியேறிவிடுகின்றன. இவ்வாறு ஓரளவு சுத்தம் செய்த தாதுப்பொருளை அமிலங் களில் கரைத்துப் பின்னர் பல ரசாயன மாற்றங்களுக்குட்படுத்தித் தூய்மையான யுரேனியத்தைப் பிரித்தெடுக்கிறார்கள். தூய நிலையில் யுரேனியம் வெள்ளியைப் போல் பளபளப்பாக இருக்கும். இது அதிக எடையுள்ளது. இதைக் கம்பியாக நீட்ட லாம்; தகடாக அடிக்கலாம். இது 1850° வெப்பநிலையில்தான் உருகத் தொடங்கும். யுரேனியம் கதிரியக்கத்தால் (த.சு.) ரேடியம் (த.க.) என்ற மற்றொரு கதிரியக் சுத் தனிமமாகவும் இறுதியில் காரியமாக வும் மாறும். யுரேனியத்திலிருந்து அணுசக்தி வெளிப் படுகின்றது. எல்லா வகைச் சக்திகளிலும் அணுசக்திதான் ஆற்றல் மிகுந்தது. இன்று அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறர்கள். மற்றும் பல ஆக்கவேலைகளுக்கும் இந்த சக்தியைப் பயன்படுத்துகிறர்கள். இதனால் யுரேனியம் மிகமுக்கியமான தனிமமாக இன்றுவிளங்கு கிறது. க இரும்பு, செம்பு முதலியவற்றுடன் சிறிது யுரேனியம் சேர்த்துத் தரமுள்ள உலோகக் கலவைகள் செய்கிறார்கள். இவ் வகையில் தயாரிக்கப்படும் எஃகு மிகக் கடினமானது. யுரேனியம் ஆக்சைடு மண்பாண்டங்களிலும், கண்ணாடிகளிலும் மஞ்சள், பச்சை முதலிய அழகிய வண்ணங் கள் கொடுக்கப் பயன்படுகின்றது. கதி ரியக்கத்தால் யுரேனியம் தோரியமாகவும் பின்னர் தோரியம் ரேடியமாகவும், இறுதி யில் காரீயமாகவும் மாறும் காலத்தைப் புவியியல் ஆராய்ச்சியாளர் கணக்கிட் டுள்ளனர். இந்தக் கணக்கை அடிப்படை யாகக் கொண்டு பூமி தோன்றி சுமார் 71 300 கோடி ஆண்டுகளுக்கு மேலாகிறது என்று தெரிவித்துள்ளனர். பார்க்க: அணுசக்தி: கதிரியக்கம்; ரேடியம். யூக்கலிப்ட்டஸ் (Eucalyptus) : தலைவலி, தடுமன் உண்டானால் நீலகிரித் தைலத்தை நெற்றியில் தேய்த்துக்கொள்கிறார்கள் அல்லவா? இதற்கு யூகலிப்ட்டல் எண்ணெய்' என்று பெயர். இது யூக்க லிப்ட்டஸ் என்ற மரத்திலிருந்து கிடைக் கிறது. நீலகிரி மலையில் இம் மரங் கள் பெருமளவில் வளர்வதால் இதை 'நீலகிரித் தைலம்' என்று சொல்கிறார்கள். யூக்கலிப்ட்டஸ் மரங்களின் தாயகம் ஆஸ்திரேலியா. அங்கிருந்து இது உலகின் பய பகுதிகளுக்கும் பரவியது. சென்ற நூற்றாண்டின் மத்தியில் இதை இந்தியா வுக்குக் கொண்டுவந்து நீலகிரியில் பயி ரிட்டனர். நீலகிரி மலையின் உயர்ந்த பகுதி கள் எங்கும் இம் மரங்கள் வளர்கின்றன. யூக்கலிப்ட்டஸ் மரங்களில் பலவகை உண்டு. சில மரங்கள் பலகைகள் அறுக் கப்பயன்படும். இப் பலகைகளைப் பூச்சிகள் அரிக்காது. இவற்றில் எளிதில் தீப் பிடித் துக் கொள்வதும் இல்லை. இவற்றைக் கொண்டு மேசை, நாற்காலி முதலியன செய்யலாம். இப் பலகைகள் நீரில் நனைந் தாலும் கெட்டுப்போவதில்லை. எனவே கப்பல் சுட்டவும் இவை பயனாகின்றன. சிலவகை மரங்கள் மிகக் கடினமானவை. இவற்றால் கட்டடத் தூண்கள், ரெயில் தண்டவாளக் கட்டைகள், வண்டிச் சக் சுரங்கள் முதலியன செய்கின்றனர். சில வகை மரங்களில் தோல் பதனிடுவதற் கான மரப் பட்டைகள் கிடைக்கின்றன. சிலவகை யூக்கலிப்ட்டஸ் மரக் கட்டைகளி லிருந்து ரேயான் என்ற செயற்கை இழை களை உற்பத்தி செய்கிறார்கள். சில மரங் கள், காகிதம் தயாரிக்கத் தேவையான கூழ் செய்வதற்குப் பயன்படுகின்றன. மற்றும் சிலவகை மரங்கள் அடுப்பெரிக்க மட்டுமே பயன்படும். முதலில் யூக்கலிப்ட்டஸ் விதைகளி லிருந்து நாற்று வளர்ப்பார்கள். பிறகு இவற்றைப் பிடுங்கி, நட்டுப் பயிர் செய் வார்கள். இம் மரங்கள் மிக வேகமாக வளரும்; மிக உயரமாகவும் வளரும். பத்து ஆண்டுகளில் இவை சுமார் 40 மீட்டர் உயரம் வளர்ந்துவிடும். யூக்கலிப்ட்டஸ் மரங்களின் இலைகளே தைலம் தயாரிக்கப் பயன்படுகின்றன. நல்ல வளர்ச்சியடைந்த மரங்களின் இலை களைப் பறித்து, பெரிய அண்டாவிலிட்டு நீருடன் சேர்த்துக் காய்ச்சுவார்கள். இதிலிருந்து வெளிப்படும் ஆவியைச் சேகரித்துக் குளிரச் செய்தால் தைலம்