பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 யுத்தம் - யுரேனியம் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கீழிருந்த குடியேற்றங்களைக் (Colonies) கைப்பற்ற ஜெர்மனி முயன்றது. இதுவே முதல் உலக யுத்தம் (1914-18) மூள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒரு நாட்டை இன்னொரு நாடு அடக்கி ஆளும்போது, அடிமைப்பட்டுள்ள நாட் டின் மக்கள் சுதந்தரம் பெறுவதற்காக. ஆதிக்கம் செலுத்தும் நாட்டை எதிர்த்து யுத்தம் செய்வார்கள். அமெரிக்கக் குடியேற்றங்கள், 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப்போரிட்டுச் சுதந்தரம் பெற்றன. வங்காள தேசம் 1971ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானை எதிர்த்து யுத்தம் செய்து சுதந்தரம் அடைந்தது. 30 மதம் காரணமாகவும் பல யுத்தங்கள் தடந்துள்ளன.ஜெர்மனியில் கத்தோலிக்கர் களுக்கும் பிராட்டெஸ்டென்டுகளுக்கும் (1618-48) போர் ஆண்டுகள் நடந்தது. பிரான்ஸ் நாட்டின் அரசுரிமை தொடர்பாக இங்கிலாந்துக்கும் பிரான் ஸுக்குமிடையே 'நூறாண்டுப் போர்' (1338-1453) நடந்தது. . ஒரே நாட்டிலுள்ள மக்கள் தங்களுக் குள் வேறுபட்டு இரு கட்சிகளாகப் பிரிந்து சண்டையிடுவதுண்டு. இதை 'உள்நாட்டுப் போர்' (Civil war) என்பார்கள். சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் வடக்கு மாநிலங்கள் அடிமை முறையை ஒழிக்க விரும்பின. தென் மாநிலங்கள் அதை எதிர்த்தன. இதனால் வட மாநிலங்களுக் கும் தென் மாநிலங்களுக்குமிடையே உள் நாட்டுப் போர் நடந்தது (1861-'65). சிலசமயம் ஒரு நாட்டின் தலைவர் உலகம் முழுவதையும் ஆள விரும்பி மற்ற நாடுகளுடன் யுத்தத்திற்குச் செல்வ துண்டு. 19ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில், பிரான்ஸை ஆண்ட நெப்போலி யன் (த.க.), ஐரோப்பா முழுவதையும் யுத்தத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறார்கள் யுத்தத்தின்போது எதிரியின் நாட்டுக்குள் வீரர்களை இறக்குவார்கள். இதற்கான பயிற்சியைப் பெறுவோர் பாரஷூட் படையினர். தம் ஆட்சியின்கீழ்க் கொண்டுவர எண்ணி, பல போர்களைச் செய்தார். அதேபோன்ற நோக்கத்துடன் ஜெர்மானியத் தலைவ ராசிய ஹிட்லர் (த.சு.) 1939-ல் இரண் டாம் உலக யுத்தத்தைத் தொடங்கினார். யுத்தம் நடந்தால் மக்கள் பலர் இறப் பார்கள். நாடு நகரங்கள் நாசமாகும். பஞ் சமும் நோயும் மக்களை வருத்தும். இரண் டாம் உலக யுத்தத்தின்போது அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது. அதைவிடக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் இன்று செய்யப்படுகின்றன. மீண்டும் ஓர் அத்தம் வந்தால் உலகமே அழிந்துவிடும் என்னும் நிலை தோன்றியுள்ளது. எனவே, இனியொரு பெரிய யுத்தம் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது இன்றைய மனித குலத் தின் சிந்தனையாக உள்ளது. பார்க்க : உலக யுத்தம். உலக யுரேனியம் (Uranium) : அணுசக்தி (த.க.) உற்பத்திக்கு இன்றியமையாதது யுரேனியம். இது ஓர் உலோகம்; கதிரியக் கத் தன்மையுள்ள ஒரு தனிமம் (த.க.). யுரேனியம் இயற்கையில் தனியாகக் கிடைப்பதில்லை. 'வேறு சில தனிமங் களுடன் சேர்ந்து கூட்டுப்பொருளாகவே காணப்படுகின்றது. யுரேனியத்தை 1789-ல் கிளாப்ரோத் (Klaproth) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி கண்டுபிடித்தார். 1896-ல் ஹென்ரி பெக் ரெல் (Henri Becquerel) என்னும் பிரெஞ்சு விஞ்ஞானி யுரேனியத்தினின்றும் கதிர்கள் வெளிப்படுவதை முதன்முதலாக அறிந் தார்.