பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரன்ட்கன் - ராக்கெட் லும் நாட்டு மக்களிடம் விடுதலை உணர் வைத் தூண்டினார். 1919-ல் நடந்த பஞ் சாப் படுகொலையைக் கண்டித்து, இவர் தமக்கு அரசு அளித்திருந்த 'சர்' பட்டத் தைத் துறந்தார். ரவீந்திரநாத டாகுர் இந்தியப் பண் பாட்டின் சின்னமாக விளங்கினார். இவர் 1941-ல் காலமானபோது உலகமே துயரக் கடலில் ஆழ்ந்தது. ரன்ட்கன் (Rontgen, 1845-1923): எலும்பு முரிவுகளைக் கண்டுபிடிக்க எடுக்கப் படும் எக்ஸ்-கதிர்(த.க.) போட்டோவைப் பார்த்திருப்பீர்கள். எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்தவர் ஜெர்மானிய விஞ்ஞானி ரன்ட்கன். இவர் ஹாலந்து, சுவிட்ஸர் வாந்து நாடுகளில் கல்வி பயின்றார். 1876-ல் பௌதிகப் பேராசிரியரானார். 1895ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்-கதிர் களைக் கண்டுபிடித்தார். எக்ஸ்-கதிர்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட வையே. குறைந்த அழுத்தத்தில் வாயு நிரம்பிய ஒரு குழாயில் மின்சாரத்தைச் செலுத்திய பொழுது, அருகிலிருந்த சில பொருள்கள் ஒளிர்வதை ரன்ட்கன் கண் டார். குறுக்கே ஒரு திரையை நிறுத்தி மறைத்தபோதிலும் அந்த ஒளிர்வு காணப் பட்டது. இவ்விளைவு ஒருவகைக் கதிர் களால்தான் ஏற்படுகிறது என்பதை அறிந் தார். ஆனால் அக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன, எப்படி உண்டாயின என்று அவருக்கு அப்போது விளங்கலில்லை. தெரியாத ஒன்றை X என்ற ஆங்கில எழுத் தால் குறிப்பிடுவது வழக்கம். எனவே அக் கதிர்களை 'எக்ஸ்-கதிர்கள்' என்று அவர் குறிப்பிட்டார். எக்ஸ்-கதிர்களைக் கண்டு பிடித்ததற்காக இவர் 1901-ல் நோபெல் பரிசு (த.க.) பெற்றார். மருத்துவத் துறையிலும் தொழில் துறை யிலும் எக்ஸ் - கதிர்கள் பல வழிகளில் இன்று பயன்படுகின்றன. எக்ஸ் - கதிர்களை 'ரன்ட்கன் கதிர்கள்' என்றும் கூறுவதுண்டு. ராக்கி மலைகள்: வட அமெரிக்காக் கண்டத்தின் மேற்குப் பகுதியில், தெற்கு வடக்காக உள்ள நீண்ட மலைத் தொடருக்கு ராக்கி மலைகள் என்று பெயர். வடக்கில் ஆர்க்டிக் சமுத்திரத்திலிருந்து தெற்கில் மெக்சிக்கோ வரை இம் மலைத் தொடர் உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்க்கா மாநிலத்திலுள்ள மக்கின்லி (Mc Kinley) இம்மலைத் தொடரிலுள்ள மிக உயர்ந்த சிகரமாகும். இதன் உயரம் 6,200 மீட்டர் (20,300 அடி). கொலராடோ மாநிலத் திலுள்ள எல்பர்ட் (Mt. Elbert), கானடாவி 79 லுள்ள ராப்சன் (Mt. Robson) ஆகியவை மற்ற முக்கியச் சிகரங்கள். கானடாவில் இம் மலைத்தொடரின் உயர மான பகுதிகள் எப்பொழுதும் பனியால் மூடப்பட்டிருக்கும். இம் மலைத்தொடரி லிருந்து பல ஆறுகள் தோன்றுகின்றன. அவற்றுள் ரீயோ கிராண்ட், மிசெளரி, ஆர்க்கன்சா, சாஸ்க்காட்சிவான் முதலியன கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள். கொலராடோ, பிரேசர், கொலம்பியா, யூக்கான் ஆகிய ஆறுகள் மேற்கு நோக்கிப் பாய்கின்றன. இம் மலைத்தொடரில் தாதுவளம் மிகுதி. தங்கம், செம்பு, காரீயம், துத்தநாகம், யுரேனியம் முதலிய உலோகங்களும் நிலக் கரி. பெட்ரோலியம், இயற்கை வாயு (த.க.) முதலியனவும் முக்கியமானவை. காடுகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன. பல இடங்களில் இயற்கைச் சூழதுடன் கூடிய பெரிய பூங்காக்களும் விலங்குப் புகலிடங் சுளும் அமைக்கப்பட்டுள்ளன. ராக்கெட் (Rocket) : திருவிழாக்காலங் களில் வாணம் விடுவதைப் பார்த் திருப்பீர்கள். வாணத்தின் திரியில் தீ தீ லைத்தவுடன் வாணத்திலுன்ன மருந்து எரிந்து வாயுவாக மாறுகிறது. வாணத் தின் மேல் பக்கம் மூடப்பட்டிருப்பதால் அழுத்தம் மிக்க அந்த வாயு வாணத்தின் அடிப் பக்கத்தில் உள்ள சிறிய துளைவழி யாக வேகமாகக் கீழ்நோக்கி வெளி வருகிறது. இதனால் வாணம் மேல் நோக்கி உந்தித் தன்னப்பட்டு வாளத்தை நோக்கிச் செல்கிறது. இந்த வாணம் ஒரு சிறிய ராக்கெட் ஆகும். ஆளுல் விண் வெளியில் மிக நெடுந்தூரம் செல்லும் படியாக இன்று அமைக்கப்படும் ராக்கெட் மிகப் பெரியது; மிக நுட்பமான பகுதிகள் பலவற்றை உடையது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே சீனர் கள் ராக்கெட்டுகளைப் போரில் பயன்படுத் தினார்கள். துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின் ராக்கெட் பெரும்பாலும் வாண வேடிக்கைகளுக்கே பயன்பட்டது. ஆனால் ராக்கெட்டுகளை மிகுந்த சக்திவாய்ந்தவை யாக அமைக்க முடியும் என்பது இரண் டாம் உலக யுத்தத்தின்போதுதான் தெரிய வந்தது. ஜெர்மானியர்கள் பல புதிய ராக்கெட்டுகளை அமைத்து, அவற்றைப்பல நகரங்களின்மீது வீசிப் பெரும் நாசம் விளைவித்தார்கள். இவையே ஏவுபடைக் கலம் (த.க.) தோன்ற வழிவகுத்தன. ஜெர்மானியர்கள் ராக்கெட்டுகளில் வெடி மருந்துக்குப் பதிலாக ஆல்கஹாலையும் (த.க.), திரவ நிலைக்கு மாற்றப்பட்ட ஆக்சிஜனையும் பயன்படுத்தி இரண்டும்