பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 ராக்கெட்- ராடார் சுலந்து எரியச் செய்து ராக்கெட்டுகளை மிகவேகமாகச் செல்லும்படி செய்தார்கள். யுத்தத்திற்குப் பிறகு ராக்கெட்டைப் பற்றி மேலும் பல ஆராய்ச்சிகள் நடந் தன. ஆயுதமாக மட்டுமின்றி வேறுபல வழிகளிலும் இதைப் பயன்படுத்த முடியும் என்று கண்டார்கள். தரைமட்டத்தி லிருந்து சுமார் 8,000 மீட்டர் உயரத் திற்குமேல் காற்றின் அழுத்தம் மிகக் குறைவு. 3,00,000 மீட்டருக்கு அப்பால் காற்றே இல்லையென்றும் சொல்லலாம். அங்கெல்லாம் விமானம் பறக்கமுடியாது. ஆனால் காற்று இல்லாத வானவெளியி லும் ராக்கெட் செல்ல முடியும். எனவே விண்வெளிப் பயணத்திற்கு (த.க.) ராக் கெட்டுகள் இன்றியமையாதன. இன்றைய ராக்கெட் பொதுவாக மூன்று அடுக்குகள் அல்லது கூடுகளை உடையது. கூடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்திருக்கும். ஒவ்வொரு கூட்டிலும் திரவநிலையில் எரிபொருள் வைக்கப்பட் டிருக்கும். முதல் கூட்டிலுள்ள எரிபொருள் எரித்து தீக் குழம்பு போன்ற வாயுவாக மாறி வேகமாக வெளிவரத் தொடங் கியதும் ராக்கெட் விரைந்து மேலே செல் லும். எரிபொருள் தீர்ந்தவுடன் அந்தக் கூடு ராக்கெட்டிலிருந்து பிரிந்து விடும். பின்பு இரண்டாம் கூட்டில் உள்ள எரி பொருள் எரியத் தொடங்கி ராக்கெட் டைத் தொடர்ந்து உயரே செலுத்தும். எரிபொருள் தீர்ந்தவுடன் அதுவும் பிரிந்து விடும். பின்னர் இதுபோலவே மூன்றாவது கூடும் இயங்கும். இவ்வாறு ராக்கெட் புவி ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டு பல லட்சம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள சந்திரனுக்கும், மற்ற கோன்களுக்கும் செல்லும். முதன் முதலாக 1957 அக்டோபர் 4-ல் சோவியத் யூனியன் விண்வெளியில் 'ஸ்புட் னிக்-1' என்னும் செயற்கைக் கிரசுத்தை அனுப்பியது. இதை விண்வெளியில் செலுத்துவதற்கு ராக்கெட்தான் பயன் பட்டது.1961ஆம் ஆண்டில் யூரி சுகாரின் {Yuri Gagarin) என்னும் ரஷ்யர் விண்வெளிக் கலமொன்றில் சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் முதல் தடவையாக பூமியை ஒருமுறை சுற்றிவரவும் ராக்கெட் இன்றியமையாத சாதனமாக இருந்தது. 1969ஆம் ஆண்டில் முதன்முதலாக அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் அப்பாலோ -11 சுயத்தில் சந்திரனுக்குச் சென்று திரும்பினர். இந்த அரிய சாதனைக்கு மிகுந்த சக்தி வாய்ந்த சாட்டர்ன் - 5 என்னும் ராக்கெட் பயன் பட்டது. இதுவும் மூன்று அடுக்குகளாக அமைந்ததாகும். இதன் உயரம் சுமார் பலர் 110 மீட்டர். இதைத் தொடர்ந்து அமெரிக்க விண்வெளி விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குச் சென்று திரும்பிவிட்டனர். இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள தும்பா என்னுமிடத்தில் ராக்கெட் தளம் அமைத்து ராக்கெட்டுகளை வாயுமண்டலத் திற்குச் செலுத்தி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இது ஐக்கிய நாடுகள் சபை யின் (த.க.) ஆதரவில் சர்வதேசத் தளமாக விளங்குகிறது. பார்க்க : விண்வெளிப் பயணம். ராடார் (Radar): ஒரு பெரிய மண்ட பத்தில் நின்று நாம் குரல் எழுப்பினால் எதிரொலி (த.க.) உண்டாவதைக் கேட் கிறோம். நாம் எழுப்பும் குரல் மண்டபத் தின் சுவரில் மோதித் திரும்புவதனாலேயே எதிரொலி கேட்கிறது. இந்த அடிப்படை யில்தான் ராடார் என்னும் சாதனம் அமைத்திருக்கிறது. ஆனால் ராடாரில் ஒலி அலைகளுக்குப் பதிலாக ரேடியோ அலைகள் எழுப்பப்படுகின்றன. ரேடியோ அலைகள் என்பவை மின்காந்த அலைகளே (Ekotro magnetic waves) ஆகும். ரேடியோ அலைகள் ஏதாவது ஒரு பொருளின்மீது மோதினால் அவை பிரதிபலித்துத் திரும்புகின்றன. இந்த அலைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு அந்தப் பொருள் எவ்வளவு தொலைவிலிருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்கள். ஒரு பொருளின் இருப்பிடத்தையும், தொலைவினையும் ரேடியோ அலைகளைக் கொண்டு அறிதல் (RAdio Deteetion And Ranging) என்பதற்கான ஆங்கிலச் சொற் ஜெடரின் சுருக்கமே ராடார் ஆகும். ராடார் கருவியைக் கண்டுபிடிப் பதற்கு வௌவால் வழிகாட்டியாக இருந்தது எனலாம். வௌவால்கள் மண் ராடார் கருவி