பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 8.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராடார் - ராணுவம் டபங்களிலும், குகைகளிலும் மிக வேசு மாகப் பறந்தாலும் அவை எதன்மீதும் மோதிக்கொள்வதில்லையல்லவா? மிகக் கூர் மையான கண்பார்வை இருப்பதே இதற் குக் காரணம் என்று முதலில் கருதினர். ஆனால் வௌவாலின் கண்களைக் கட்டிய பின்னரும் அது எங்கும் மோதிக்கொள்ளா மல் பறப்பதைக் கண்டார்கள். வாயை யும், காதையும் கட்டியபோது அது நிலை தடுமாறியது. இதிலிருந்து வௌவால் எழுப்பும் ஒலி பொருள்களின்மீது மோதித் திரும்புவதிலிருந்து, எதிர்ப்படும் தடைகளை அது அறிந்து விலகிச் செல்கிறது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். இந்த ஆராய்ச்சியே ராடாரை அமைப்பதிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் ராடாரில் ஒலிக்குப் பதிலாக ரேடியோ சிற்றலைகள் (Micro waves) பயன்படுத்தப்படுகின்றன. ஒலி அலைகள் வினாடிக்கு 330 மீட்டர் வேகத்தில் செல்கின்றன. ஆனால் ரேடியோ அலைகள் வினாடிக்கு 3,00,000 கிலோமீட் டர் வேகத்தில் செல்கின்றன. ஒருமைக்ரோ வினாடி (Micro-second) என்பது ஒரு வினாடி யில் பத்து லட்சத்தில் ஒரு பங்கைக் குறிக்கும். மேலேயுள்ள கணக்கின்படி ரேடியோ அலையானது ஒரு மைக்ரோ வினாடியில் 300 மீட்டர் தொலைவு செல் கிறது. ஒரு பொருளின்மீது மோதி ஒரு மைக்ரோ வினாடியில் திரும்பினால் அந்தப் பொருள் 150 மீட்டர் தொலைவில் இருக் கிறது என்று தெரிந்துகொள்ளலாம். ராடார் கருவியின் அமைப்பைப் பார்ப் போம். படத்தில் காண்பதுபோன்று உயர மான சட்டக் கோபுரத்தின் உச்சியில் ஒரு உட்குவிந்த பிரதிபலிக்கும் தகடு (Reflector) பொருத்தப்பட்டிருக்கும். இதன் நடுவே 'ஏரியல்' (Aerial) இருக்கும். இது அலை பரப்பி (Transmitter), அலைவாங்கி (Receiver) கருவிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். அலைகள் ஒரு பொருளின்மீது பட்டுத் திரும்பி வருவதற்கு ஆகும் நேரத்தை ராடார் சாதனமே கணக்கிட்டுத் தெரிவிக் கிறது. போரின்போது ராடார் மிகவும் பயன் படுகிறது. எதிரி விமானங்கள் நெருங்கு வதை முன்னதாகவே நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள ராடார் கருவியைப் பயன்படுத்துகின்றனர். விமானங்களிலும். கப்பல்களிலும், நீர்மூழ்கிக் கப்பல்களிலும் ராடார் சாதனத்தைப் பொருத்தி யுள்ளனர். இதனால் எதிரிகளின் கப்பல்கள் இருக்குமிடங்களைத் தெரிந்துகொள்வதும், நீர்மூழ்கிக் கப்பல்களை அழிப்பதும் எளிதாகிறது. இருளாக இருந்தாலும் மூடுபனி அல்லது மேகங்கள் இருந்தாலுங் கூட, ராடார் நன்கு செயல்படக்கூடியது. 81 ராடார் போர்க் காலத்தில் மட்டுமின்றி சமாதான காலத்திலும் பல வழிகளில் பயன்படுகிறது. விமான நிலையங்களில் விமானங்கள் ஒழுங்காக இறங்குவதற்கு வழிகாட்ட விமானக் கட்டுப்பாட்டு நிலையத்திலுள்ள ராடாரைப் பயன் படுத்துகிறார்கள். கப்பல்கள் மூடுபனியின் போது பாறைகளில் மோதுவதைத் தவிர்க் கவும், பனிப் பாறைகள் மிதந்து வருவதை அறியவும் ராடார் உதவுகிறது. சுப்பல்கள் மூடுயனிக் காலத்தில் துறைமுகத்திற்குள் வருவதற்கு வழிகாட்டவும், வானிலையைக் கண்டறியவும், புயல் உருவாவதை முன்ன தாகவே அறிந்துகொள்ளவும் ராடார் இன்றியமையாத சாதனமாக உள்ளது. மிகவும் விரைவாகச் செல்லும் ரெயில் வண்டிகளில் ராடாரைப் பொருத்தி, ரெயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் விபத்துகளைத் தவிர்க்கலாம். ராணுவம்: ஒரு நாட்டை வெளி நாடுகள் தாக்காதவாறு பாதுகாக்கவும், உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் இன்றியமையாது தேவைப்படுவது ராணு வம். இது ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றது. பண்டைக்கால முதலே ஒவ்வொரு நாட் டிலும் வீரர்களின் படை இருந்துவந்துள் ளது. ஆதியில் படைவீரர்கள் நடந்தோ, குதிரைமீது சென்றோ போரிட்டனர்; ஈட்டி, வாள், வில், அம்பு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தினர். இரு நாட் டுப் படைகளும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துப் போர்புரியும். இக் காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் பயனாகத் தோன்றி யுள்ள நவீன போக்குவரத்துச் சாதனங் களில் சென்று படைவீரர்கள் போரிடுகின்ற உலகின் ஒரு பகுதியில் இருக்கும். னர். இந்திய ராணுவத்தினரின் அணிவகுப்பு