பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

லென்ஸ்

5


கண்ணாடியில் இரு பரப்புகளும் சம தளமாக இருக்கின்றன. லென்ஸில் ஒரு பரப்பாவது வளைவாக இருக்கும். லென்ஸ் களில் ஆறுவகை உண்டு. இரு பரப்புகளும் குவிந்து இருப்பது குவிலென்ஸ் ( Convex lens ) ஆகும். இரு பரப்புகளும் குழி யாக இருப்பது குழிலென்ஸ் ( Concave lens ). ஒரு பரப்பு சமதளமாகவும் மற்றொரு பரப்பு குவிந்தும் இருப்பது சம தளக் குவிலென்ஸ் (Plano convex ) . ஒரு பரப்பு சமதளமாகவும் மற்றது குழி வாகவும் இருப்பது சமதளக் குழிலென்ஸ் (Plano concave ) மற்ற இரண்டு குழி குவிலென்ஸ் ( Concavo-convex ), குவி குழிலென்ஸ் ( Convexo - concave) ஆகும்.

ஒளியானது ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது தன் பாதையிலிருந்து சற்று விலகிச் செல்லும். நீர் நிரம்பிய ஒரு குவளையில் ஒரு கரண்டியைப் போட்டால், நீருக்குள் இருக்கும் கரண்டியின் பகுதி சிறிது வளைந்து தோன்றும். இத் தன்மைக்கு ஒளிக்கோட்டம் (Refraction ) என்று பெயர். இதுபோல, கண்ணாடியின் வழியே செல்லும் ஒளிக் கதிர்களும் தம் பாதையிலிருந்து சிறிது விலகிச் செல்கின்றன. இந்த ஒளிக்கோட்டம் லென்ஸ்களில் அவற்றின் பரப்புகளின் வளைவுக்கு ஏற்ற வகையில் நிகழ்கிறது. பொதுவாக, ஒரு லென்ஸின் வழியே செல்லும் ஒளிக் கதிர்கள் யாவும் அந்த லென்ஸின் பருமனான பகுதியையொட்டியே வளை கின்றன. இணையாக வரும் ஒளிக்கதிர்கள் ஒரு குவிலென்ஸைக் கடந்து சென்றால் அவை யாவும் ஓரிடத்தில் ஒன்றாகக் குவி கின்றன. அந்த இடத்திற்குக் குவியம் (Focus) என்று பெயர்.


1300ஆம் ஆண்டுக்குச் சற்று முன்பு தான் மூக்குக்கண்ணாடிகள் வழக்கத்திற்கு வந்தன. 1608-ல் தொலைநோக்கி (த.க.) அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல வகைக் கருவிகளில் லென்ஸ்க ள் பயன் பட்டன.

நம் கண்கள் ஒவ்வொன்றிலும் ஒரு லென்ஸ் உள்ளது. இது ஒரு குவிலென்ஸ். இதன் வழியே கண்ணுக்குள் செல்லும் ஒளிக்கதிர்கள் பார்வைப்படலத்தில் குவி கின்றன. அதாவது, நாம் பார்க்கும் பொருளின் பிம்பம் பார்வைப்படலத்தில் விழுகிறது. பொருள்களின் தொலைவிற்கு ஏற்றவாறு நம் கண்ணிலுள்ள லென்ஸ் சிறிது முன்னும்பின்னும் நகர்ந்து பிம்பத்தைப் பார்வைப் படலத்தில் விழவைக்கிறது. லென்ஸின் இந்தத் தன்மையை மீறி பிம்பம் பார்வைப் படலத்தில் விழாவிட்டால், பார்க்கும்

கண்ணிலுள்ள குவி லென்ஸ் வழியே செல்லும் ஒளிக்கதிர்கள் பார்வைப்படலத்தில் குவிகின்றன. அதாவது, நாம் பார்க்கும் பொரு ளின் பிம்பம் பார்வைப்படலத்தில் விழுகிறது.

காமிராவிலுள்ள குவி லென்ஸ் வழியே செல்லும் ஒளிக்கதிர்கள் பிலிமில் குவிகின்றன, அதாவது, காமிராவுக்கு எதிரிலுள்ள பொரு ளின் பிம்பம் பிலிமில் பதிகிறது.