பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

லெனின்

பொருள் தெளிவாகத் தெரியாது. அந்த நிலையில் தான் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்கிறோம். மூக்குக்கண்ணாடிச் சட்டத் தில் பொருத்தப்படும் லென்ஸ்கள், பிம்பத்தைப் பார்வைப்படலத்தில் விழச் செய்கின்றன. 'பார்வை' என்னும் தலைப்பி லுள்ள கட்டுரையில் இதை விளக்க மாகப் படங்களுடன் காணலாம்.

மூக்குக் கண்ணாடிக்கு மட்டுமின்றி, பல வகையான கருவிகளுக்கும் லென்ஸ்கள் தேவைப்படுகின்றன. பல கருவிகளில் இவையே முக்கிய உறுப்பாகும். காமிரா, தொலைநோக்கி, மைக்ராஸ்கோப், சினிமா புரொஜக்ட்ட ர் முதலிய கருவிகளில் பல அளவுகளில் பல வகை லென்ஸ்கள் உள்ளன. வானாராய்ச்சி நிலையங்களி லுள்ள தொலைநோக்கி லென்ஸ்கள் மிகப் பெரியவை. இவற்றின் விட்டம் சுமார் ஒரு மீட்டர்வரை இருக்கும்.

லென்ஸைத் தயாரிக்கத் தனிப்பட்ட கண்ணாடி உள்ளது. அதைக் கார் போரண்டம் (த.க.) துகள்களினால் மெல்லத் தேய்த்து, வேண்டியவாறு குவி லென்ஸாகவோ குழி லென்ஸாகவோ செய்வார்கள். பிறகு ஒருவகைப் பசையினால் அதற்கு மெருகேற்றிப் பளபளப்பாக்குவார்கள். இதை மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செய்யவேண்டும். அதிகத் திறமைவாய்ந்தவர்களே லென்ஸ்களை நல்ல முறையில் துல்லியமாகச் செய்ய முடியும். எனவே தான் லென்ஸ்கள் விலை மிகுந்தவையாக இருக்கின்றன. காமிரா போன்ற கருவிகளின் விலை அதிகமாயிருப்பதன் காரணம் அவற்றிலுள்ள லென்ஸ்கள் தாம். படிகக்கல் (த.க.), பிளாஸ்ட்டிக் இவற்றாலும் இன்று லென்ஸ் தயாரிக்கின்றனர்.


லெனின் (1870-1924) : சோவியத் ரஷ்யாவின் தந்தை எனப் போற்றப்படுபவர் லெனின். இவர் சோவியத் குடியரசை நிறுவியவர். பொதுவுடைமைக் (த.க.) கொள்கையை ரஷ்ய மக்களிடையே பரப்பி, அதை நடைமுறையில் செயலாக்க முயன்றவர். இவர் சிறந்த சிந்தனையாளராகவும் அரசியல் மேதையாகவும் விளங்கினார்.

இவரது இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியனாவ் (Vladimir Ilyich Ulyanov) என்பதாகும். மூன்றாம் அலெக்சாண்டர் மன்னரைக் கொல்ல 1887-ல் நடந்த சதியில் பங்குகொண்டதாகக் கூறி இவருடைய தமையனாரை அரசாங்கம் தூக்கிலிட்டது. இந்நிகழ்ச்சி லெனினை அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு புரட்சிக்காரராக ஆக்கியது.

லெனின்

இந்த சமயத்தில் ரஷ்ய மக்களிடையே பெரும் மனக்கசப்பு நிலவியது. பெரும்பாலான மக்களுக்கு வாக்குரிமை இல்லை ; வேறு அரசியல் உரிமைகளும் இல்லை. குடியானவர்கள் மிகுந்த ஏழ்மையில் இருந்தார்கள். பிரபுக்களும், நிலவுடைமை யாளர்களும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள். இந்நிலைமையை மாற்றியமைக்க நடுத்தர நிலையிலுள்ள குடும்பத்தினர் அரசியல் குழுக்களை அமைக்கலானார்கள். லெனின் சட்டக்கல்வி பயின்றார். சமூகச் சீர்திருத்தங்களில் மிகுந்த நாட்டங்கொண்டு மார்க்ஸின் ( Karl Marx, த.க.) பொதுவுடைமைத் தத்துவத்தை நன்கு கற்றார்; அதை ரஷ்யாவில் பரப்பிப் புரட்சியை உண்டாக்க உறுதி பூண்டார்.

லெனின் 1893-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்கு நகரத்திற்குச் சென்று, 'தொழிலாளர் விடுதலைக் கழக'த்தை நிறுவித் தமது பிரசாரத்தை நடத்தலானார். இதனால் 1895ல் இவர் கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1898-ல் தம்முடைய இயக்கத் தோழியராக இருந்த குருப்ஸ்காயா (Krupskaya ) என்பவரை மணந்தார்.

1900-ல் லெனின் சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மூனிக் (ஜெர் மனி), லண்டன் ஆகிய நகரங்களிலிருந்து 'தீப்பொறி' (Iskra) என்ற பத்திரிகையை வெளியிட்டார். இப் பத்திரிகை ரஷ்யாவுக்கு இரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டது. 1903-ல் ரஷ்ய சமூக ஜன