பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வடிகுழாய்

வடிகுழாய்

வைத்துக் கொள்வோம். வடிகுழாயினுள் நீரை நிரப்பி, விரல்களால் அதன் இரு முனைகளையும் மூடிக்கொள்ளவேண்டும். சிறிய புயத்தை A பாத்திரத்திலுள்ள நீரினுள் அமிழ்த்தி, நீண்ட புயத்தைக் கீழேயுள்ள B பாத்திரத்தினுள் வைத்து, குழாயின் இரு முனைகளையும் திறந்து விட்டால் A-யிலிருந்து நீர் B-க்குப் பாயும். வடிகுழாய் கண்ணாடியால் செய்யப் பட்டிருக்கலாம்; அல்லது ரப்பர் குழாயாகவும் இருக்கலாம். ரப்பர் குழாய் வளையக் கூடியதாகையால் தேவைக்கேற்றாற்போல் அதில் உயரத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இக்குழாயில் நீரை நிரப்பாமலே வேறொரு விதமாகவும் செயல்பட வைக்க லாம். சிறிய முனையை மேலேயுள்ள பாத்திரத்தில் நீரினுள் வைத்து, மற்றொரு முனையை வாயில்வைத்துக் குழாயினுள் உள்ள காற்றை உறிஞ்ச வேண்டும். Aயிலிருந்து குழாய் வழியே நீர் பாய்ந்துவரும். வாயருகே உள்ள முனை வழியே நீர் சிறிது வெளிவந்ததும் உடனே அந்த முனையைக் கீழே தாழ்ந்த மட்டத்திலுள்ள B பாத்திரத்தில் வைக்கவேண்டும். வடிகுழாய் முன்போலவே இயங்கும்.

வடிகுழாய் காற்றின் அழுத்தத்தால் இயங்குகிறது. A பாத்திரத்திலுள்ள நீரின் மேற்பரப்பில் காற்று அழுத்துவதால் வடிகுழாய் வழியே நீர் மேலே சென்று பிறகு கீழ்நோக்கி வந்து B பாத்திரத்தில் விழுகிறது. A பாத்திரத்திலுள்ள வடிகுழாய்ப் பகுதியின் நீளம் மிக அதிகமாக இருந்தால் வடிகுழாய் செயல்படாது.


வண்டு : பச்சை, சிவப்பு, நீலம் முதலிய நிறங்களைக் கொண்ட அழகிய பொன் வண்டுகளைப் பார்த்திருப்பீர்கள். பூச்சிகளுள் இவை வண்டு இனத்தைச் சேர்ந்தவை. வண்டுகளில் பலவகை உண்டு. சில வண்டுகள் பெரியவை; இவை 15 சென்டிமீட்டர் நீளமிருக்கும். சில கடுகுபோல மிக நுண்ணியவையாக இருக்கும்.

வண்டுகளை எங்கும் காணலாம். மரக் கிளைகளிலும் நிலத்தில் இறந்து கிடக்கும் பிராணி, மட்கிப்போன மரம், சாணம் முதலியவற்றிலும் வண்டுகள் வாழ்கின்றன. நீரிலும் சில வண்டுகள் காணப்படுகின்றன.

பூச்சிகளைப்போன்றே வண்டுகளுக்கும் நான்கு சிறகுகள் உண்டு. ஆனால் வண்டுகளில் இரண்டு சிறகுகள் உடலின் மேற்புறத்திலும் மற்ற இரண்டு சிறகுகள் அவற்றுக்கு அடியில், உட்புறத்திலும் இருக்கின்றன. மேற்புறத்திலுள்ள சிறகுகள் கடினமான கொம்புப் பொருளாலானவை. உட்புறத்திலுள்ள சிறகுகளோ சவ்வு போன்று மெல்லியதாகவும் அகலமாகவும் இருக்கும். வண்டு பறக்கும்போது வெளிப்புறச் சிறகுகள் தூக்கிக்கொள்ளும்; உட்-

சிலவகை வண்டுகள்

சிலவகை வண்டுகள்