பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வெண்கலம் 73


வெடிமருந்தை அறிந்திருந்தனர். எனினும் 13ஆம் நூற்றாண்டில் துப்பாக்கி மருந்து (Gun powder ) கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, வெடிமருந்தின் பயன் உல கெங்கும் தெரியவந்தது. துப்பாக்கி மருந்தைப் போருக்கும் பயன்படுத்தலாம் எனக் கண்டனர். 1846-ல் நைட்ரிக அமிலத்திலும் கந்தக அமிலத்திலும் பஞ்சு இழைகளை நனைத்து 'வெடி பஞ்சு' (Gun cotton ) என்ற வெடிமருந்தை ஒரு ஜெர் மானியர் கண்டு பிடித்தார். பின்னர் பஞ்சுக்குப் பதில் காகிதம் அல்லது மரத் தூளைப் பயன்படுத்தி இதே வெடிமருந்து தயாரிக்கப்பட்டது.

கிளிசரினை நைட்ரிக, கந்தக அமிலங்க ளுடன் கலந்து, நைட்ரோகிளிசரின் என்ற சக்திவாய்ந்த வெடிமருந்தை 1847-ல் ஓர் இத்தாலியர் கண்டுபிடித்தார். இது வெடிக்கும்போது தன்னுடைய கன அளவைப்போல் 12,000 மடங்கு கன அளவு வாயுவை உண்டாக்கியது. இதைச் சிறிது கவனக் குறைவாகக் கையாண்டால் வெடித்து விபத்துகளை உண்டாக்கும். எனவே, மரத்தூள் அல்லது கீசல்கர் (Kieselghur) என்ற இயற்கைப் பொருளுடன் இதைச் சேர்த்துச் சிறு சிறு குச்சிகளாகச் செய்தனர். இதற்கு டைனமைட் (Dynamite) என்று பெயர். இதை ஆபத்தின்றிக் கையாள முடிந்தது. இதை முதன்முதலில் 1866-ல் தயாரித்த வர், நோபெல் பரிசு (த.க.) நிறுவனத்தைத் தோற்றுவித்த சுவீடன் நாட்டு விஞ்ஞானி யான ஆல்பிரட் நோபெல் (Alfred Nobel).

வெடிமருந்துகளில் முக்கியமாக இரண்டு வகை உண்டு. ஒன்று, வன்மைமிக்க வெடி மருந்து (High explosive). பாறைகளை உடைக்கவும், சுரங்கங்கள் தோண்டவும் இது பயன்படுகின்றது.வெடிக்கும் பொழுது பொருள்களை முன்னோக்கி உந்தித் தள்ளும் வெடிமருந்து ( Propellant) இன்னொரு வகை. துப்பாக்கி மருந்து போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. எல்லா வகைத் துப்பாக்கிகளுக்குமான குண்டுகள் தயாரிக்கவும், ராக்கெட்டு களிலும் ஏவுகணைகளிலும் உந்துவிசையை உண்டாக்கவும் இவை பயன்படுகின்றன.

பலவகைக் குண்டுகள் தயாரிக்க மட்டு மின்றிப் பல ஆக்கப் பணிகளுக்கும் வெடி மருந்துகள் பயனாகின்றன. சுரங்கங்கள் தோண்டவும், குடைவு வழிகள் (த.க.) அமைக்கவும்,ராக்கெட்டுகளை விண் வெளியில் செலுத்தவும் வெடிமருந்துகள் பயன்படுகின்றன.

வெண்கலம் (Bronze ) : கோயில் களில் உள்ள மணிகளின் ஓசை கேட்க இனிமையாக இருக்கும். இந்த மணிகள் வெண்கலத்தினால் செய்யப்படுகின்றன. வெண்கலம் ஓர் உலோகக் கலவை (த.க.) ஆகும். செம்பும் (Copper ) வெள்ளீயமும் ( Tin ) சேர்ந்தது வெண்கலம்.

வெண்கலத்தில் சுமார் 85% செம்பு, 15% வெள்ளீயம். துத்தநாகம், காரீயம் ஆகிய உலோகங்களும், பாஸ்வரம், கரி போன்ற அலோகங்களும் மிகச் சிறிதளவு கலக்கப்படுவதுண்டு.

வெண்கலத்தில் துருப்பிடிப்பதில்லை. அதனால் எந்திர உறுப்புகள் செய்ய இது பயன்படுகிறது. இதில் களிம்பு ஏறுவ தில்லை. எனவே, பாத்திரங்கள் செய்யப் பயன்படுகிறது. இதற்குப் பித்தளையைவிட கரை தலை எதிர்க்கும் ஆற்றல் அதிகம் உண்டு. ஆகவே, இதில் குழாய்கள், அடைப் பான்கள் முதலியன செய்யப்படுகின்றன. இதைக் கம்பியாக நீட்டலாம்; தகடாக அடிக்கலாம்.

வெண்கலத்தில் கலக்கப்படும் உலோ கங்களின் விகித அளவை மாற்றிப் பல வகையான வெண்கலங்கள் தயாரிக்கப் படுகின்றன. கோயில் மணிகள் செய்யப் பயன்படும் வெண்கலம், மணி வெண் கலம் (Bell metal ) எனப்ப டும். இதில் எட்டுப் பங்கு செம்புக்கு இரண்டு பங்கு வெள்ளீயம் கலக்கப்படுகிறது. இந்த வெண்கலம், சாதாரண வெண்கலத்தை விட பளபளப்பானது ; கெட்டியானது; ஆனால் எளிதில் உடையக் கூடியது. இது மிக இனிய நாதம் தரும்.

பண்டைக் காலமுதலே வெண்கலத்தில் உருவச்சிலைகள் செய்யப்பட்டுவருகின்றன.

வெண்கலச் செம்பு