பதிலும்
153
அப்படியே சரிந்து விழுந்துவிடும். அடுக்கும் செங்கற்கள், ஒன்றாகச் சேர்த்து ஒரே பாறைபோல் இருந்தால்தான் சரியாமல் நிற்கும். அதற்காகத்தான் சுண்ணாம்பையும் உபயோகிக்கிறார்கள். சுண்ணாம்பு உபயோகிக்க முடியாதவர்கள் மண்ணை உபயோகிக்கிறார்கள். ஜலத்தில் குழைந்த சுண்ணாம்பையோ மண்ணையோ கொண்டு செங்கற்களை ஒட்டி வைக்கிறார்கள். அந்த சுண்ணாம்பும் மண்ணும் உலர்ந்ததும் இறுகி விடுகின்றன. அதனால் செங்கற்கள் ஒன்றாகச் சேர்ந்து பலமான சுவராக ஆகிவிடுகிறது.
232 அப்பா ! புஸ்தகங்களின் பக்கங்களைத் திருப்பும் பொழுது விரலை நாவில் தொட்டுக் கொள்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
தம்பி! நாம் பக்கங்களை விரல் நுனியைக் கொண்டே திருப்புகிறோம். அப்பொழுது விரல் நுனியில் ஏதேனும் ஒட்டக்கூடிய வஸ்து இருந்தால் பக்கங்களைச் சுலபமாகத் திருப்பமுடியும். ஆனால் அதற்காகக் கோந்து உபயோகித்தால், கடுதாசி விரலில் ஒட்டிக்கொண்டு வரும். அப்பொழுது பக்கங்கள் கிழிந்துகூடப் போகும். அதனால்தான் விரலை உமிழ்நீரில் தேய்க்கிறார்கள். அது கோந்து மாதிரி அதிகமாக ஒட்டிக்கொள்ளாது. அதனால் பக்கங்களை எளிதில் திருப்பலாம். ஆனால் உமிழ் நீரில் நோய்க் கிருமிகள் இருக்கும். அதனால் அந்தப் புஸ்தகத்தை உபயோகிக்கும் பிறர்க்குக் கேடு உண்டாகும். ஆதலால் விரலை ஜலத்தில் தேய்த்தே பக்கங்களைத் திருப்பவேண்டும். ஜலத்துக்கும் ஒட்டிக்கொள்ளும் சக்தி உண்டு. ஜலந் தொட்டுக் கொள்வதால் யார்க்கும் கேடு உண்டாகாது.
233 அப்பா! மையைக் கொண்டு கடுதாசியில் எழுதினால் தெரிகிறது, ஒட்டுத்தாளில் எழுதினால் தெரியவில்லை, அதற்குக் காரணம் என்ன? தம்பி! பென்சிலைக்கொண்டு எழுதும்போது. பென்சிலைத் தாளின்மீது தேய்க்கிறோம். அதனால் பென்சில்