பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

171

தம்பி! எல்லாப் பாத்திரங்களுக்கும் ஈயம் பூசமாட்டார்கள். பித்தளைப் பாத்திரங்கட்கும் செப்புப் பாத்திரங் கட்கும்தான் பூசுவார்கள். அந்த இரண்டு பாத்திரங்களிலும் புளிப்பான வஸ்துக்கள் வைத்தால் கைப்பு உண்டாகும். அது உடம்புக்குக் கேடு செய்யும். ஆனால் ஈயப் பாத்திரத்தில் புளிப்பான மோரோ குழம்போ எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் கைப்பு உண்டாகாது. அதனால் சிலர் முழுவதும் ஈயத்தைக் கொண்டே பாத்திரங்கள் செய்வதுண்டு. ஆனால் ஈயப் பாத்திரங்கள் விலையும் அதிகம், கனமும் அதிகமாயிருக்கும். அழகாயுமிரா. அதனால் பித்தளைப் பாத்திரங்களிலும் செப்புப் பாத்திரங்களிலும் ஈயம் பூசி உபயோகிப்பதே சாதாரணமான வழக்கம்.

ஆனால் ஈயமானது காரீயம் என்றும் வெள்ளீயம் என்றும் இரு வகைப்படும். காரீயத்தைக் கடுதாசியில் தேய்த்தால் கறுப்பாகத் தெரியும். அந்தக் காரீயத்தைத் தான் சாதாரணமாகப் பூசுகிறார்கள். ஆனால் அது தவறு, காரீயம் பூசிய பாத்திரத்தில் புளிப்பு வஸ்துக்கள கைப்பது உடனே தெரியாதே தவிர உண்மையில் கைப்பு உண்டாகவே செய்கிறது. அதனால் விலை அதிகமானாலும் வெள்ளீயம் தான் பூசவேண்டும். அது தான் உடம்புக்குக் கேடு செய்யாது.

264 அப்பா! இரும்பு துருப்பிடிக்கிறது, செம்பில் களிம்பு ஏறுகிறது. பீங்கானில் அது ஒன்றுமில்லை. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! இரும்பின்மீது ஈரமான காற்றுப்பட்டால் அப்பொழுது இரும்பு காற்றிலுள்ள பிராணவாயுவோடு சேர்ந்து ஒரு புது வஸ்துவாக மாறுகிறது. அது சிவப்பு நிறமாயிருக்கும், அந்தப் புது வஸ்துவைத்தான் துரு என்று கூறுகிறார்கள். அதே மாதிரி செம்பின் மீதும் ஈரமான காற்றுப்பட்டால் அப்பொழுது செம்பு காற்றிலுள்ள