பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

37

ஆகின்றன. அப்பொழுது அந்த நீர்த்துளிகள் கனம்தாங்க முடியாததால், அந்தரத்தில் மிதக்க மாட்டாமல் பூமிமீது வந்து விழுந்து விடுகின்றன. அதைத்தான் நாம் மழை என்று கூறுகிறோம்.

50 அப்பா! நீராவிதானே மேகமாய் மழை பெய்கிறது. ஆனால், வேனிற் காலத்தில் மழை பெய்யக் காணோமே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், வேனிற் காலத்தில் சூரிய வெப்பத்தினால் அதிகமான நீராவி உண்டாகத்தான் செய்கிறது. ஆனால் அப்படி உண்டாகும் நீராவி மேகமாக மாறுவதில்லை. நீராவி உஷ்ணமாயிருக்கும். அதனால் அது மேலே கிளம்பும், அங்கே குளிராயிருந்தால் அது சிறு நீர்த் துளிகளாக மாறும். அப்படி உண்டாகும் நீர்த் துளித் தொகுதியைத் தான் நாம் மேகம் என்று கூறுகிறோம்.

ஆனால் வேனிற் காலத்தில் நீராவி மேலே கிளம்பினாலும் அங்கும் உஷ்ணமாகவே இருக்கும். அதனால் தான் வேனிற் காலத்தில் மேகமும் உண்டாவதில்லை. மழையும் பெய்வதில்லை. மேகங்கள் உண்டானலும், அவைகளின் மீது உஷ்ணமான காற்று வீசும்பொழுது, அவை மீண்டும் நீராவியாக மாறிவிடும். உஷ்ணமான காற்று வீசாமல் இருந்து மழை துளிகள் உண்டானலும், அவை கீழே இறங்கும்பொழுது உஷ்ணமாய்ப்போய் மீண்டும் நீராவியாக மாறிவிடும். இந்தக் காரணங்களில்தான் வேனிற் காலத்தில் அதிகமான நீராவி உண்டானாலும் மழை பெய்வதில்லை.

51 அப்பா! சில வேளைகளில் துளி மேகங்கூடக் காணவில்லையே, அப்பொழுது மேகங்களெல்லாம் எங்கே போயிருக்கும்?

பூமியிலுள்ள ஜலம் சூரிய வெப்பத்தால் ஆவியாக மாறுகின்றது. உஷ்ணமான ஆவி காற்றைவிடக் கனம்