பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கேள்வியும்

ஆனால் இரவில் மழை மேகமாயிருந்தால் வீட்டுக்குள் இருந்துகொண்டே திசைகளை அறிவது எப்படி? திசையறி கருவி என்று செய்திருக்கிறார்கள். அதில் ஒரு சிறு ஆணி நட்டமாக நிற்கும். அதன் மீது ஆடும்படியாக ஒரு காந்த ஊசி வைக்கப்பட்டிருக்கும். அதை எப்படித் திருப்பி வைத்தாலும் அந்தக் காந்த ஊசி வடக்குத் திசையை நோக்கியே நிற்கும். அதற்குக் காரணம் பூமியும் ஒரு காந்த வஸ்துவாய் இருப்பதுதான். அதனல் பூமியின் வடக்குத் துருவம் காந்த ஊசியைத் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது. ஆகவே அந்த ஊசியை பார்த்ததும் நாம் திசையை அறிந்த கொள்ளலாம்.

49 அப்பா மேகமும் மழையும் எப்படி உண்டாகின்றன?

தம்பி! பூமியின் மீது பல நதிகள் ஒடுகின்றன. அங்கங்கே பல ஏரிகளும் காணப்படுகின்றன. நாம் பல குளங்களும் கிணறுகளும் வெட்டுகிறோம். அவற்றிற்கு எல்லாம் மேலாக ஐந்து பெரிய சமுத்திரங்களும் உள. ஆதலால் எப்பொழுதும் ஜலம் சூரிய வெப்பத்தால் ஆவியாக மாறி மேலே எழுந்து போய்க்கொண்டே இருக்கிறது. அந்த நீராவி குளிர்ந்த காற்றைச் சந்திக்குமானுல் உடனே மேகங்களாக அதாவது நுண்ணிய நீர்த்துளித் தொகுதிகளாக ஆகிவிடுகின்றன. அந்த மேகங்கள் மறுபடியும் குளிர்ந்த காற்றைச் சந்தித்தால் அந்த நீர்த்துளிகள் பெரியவைகள்