இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிஞர் ஒருவர் வீட்டைக் கட்டி
அடக்க மாக வாழ்ந்தனர்.
‘சிறிய வீடு’ என்றே அதனைத்
தெருவில் சென்றோர் கூறினர்.
அந்த அறிஞர் தம்மைத் தேடி
அன்று ஒருவர் வந்தனர்,
வந்த மனிதர், “இந்த வீடும்
வாழ்வ தற்கே ஏற்றதோ ?
முகப்பு சிறிதும் அழகா யில்லை.
முற்றம் குறுகி யுள்ளது.
சிகப்பு வர்ணம் அடித்தி ருந்தால்
சிறப்பே” என்றார். அத்துடன்,
“நண்பர் பலரும் கூடி வந்தால்
நன்க மர்ந்து பேசவே,
சின்னஞ் சிறிய இந்த அறையில்
சிறிதும் வசதி யில்லையே!”
105