உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கரும்பின் ருசி



மறுநாட் காலை பொங்கல் விழா.
வாங்கிக் கரும்புடன் தேங்காய்கள்
குறும்புக் குப்பனின் தந்தையுமே
கொண்டு தம்வீடு வந்தடைந்தார்.

குப்பனின் நாக்கில் நீர்வழிய
‘குடுகுடு’ என்றே ஓடிவந்தான்.
அப்பா விடமுள்ள கரும்பினையே
அவசர மாகப் பறிக்கவந்தான்.

“படைத்த பிறகுதான் தின்றிடலாம்.
பதறிடல் பயனில்லை” என்றுரைத்தார்.
தடுத்திடும் தந்தையின் மொழிகளினால்
தாங்கொணாக் கோபம் கொண்டனனே.

அப்பா கரும்பினைத் துண்டுகளாய்
அறுத்துமே பானையில் வைத்தனரே.
அம்மா பானையை வைக்குமிடம்
அறிந்தனன் குப்பன்; மகிழ்ந்தனனே.

117