உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூனைபோல் இரவில் எழுந்தவனும்
போயினன், யாவரும் தூங்குகையில்.
பானையின் உள்ளேகை விட்டனனே;
பல்லால் கரும்பைக் கடித்தனனே.

“ஐயையோ!” என்றஓர் சத்தமுடன்
அலறித் துடித்துக் குதித்தனனே.
கையை உதறியே கத்துவதைக்
கண்டனர் பெற்றோரும், ஓடிவந்தே.

கரும்பினைக் கடித்தவன் வாயினேயே
கடித்தது கரும்பினில் மொய்த்திருந்த
எறும்புகள் தாமென்று யாவருமே
எளிதினில் உண்மை அறிந்தனரே!

“பொழுது விடியும் வரையிலும்நீ
பொறுத்திட லாகாதோ?” என்றுரைத்தே
அழுதிடும் கண்கள் துடைத்ததுடன்
அவனது பெற்றோர்கள் தேற்றினரே.

118