உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சட்டை போட்ட குரங்கு

பண்டி கைக்கு வாங்கிய
பால னுடைய சட்டையைக்
கொண்டு சென்று விட்டது,
குரங்கு ஒன்று திருடியே !

அருமை யான சட்டையை
அணிந்து மனிதர் போலவே
குரங்கு காட்டை நோக்கியே
‘குடுகு’ டென்று சென்றது.

ஓடிச் சென்று காட்டிலே
உள்ள நண்பர் முன்னரே
ஆடிப் பாடிக் குதித்தது;
அவைகள் கேட்க உரைத்தது:

‘மனிதன் போல உடையுடன்
வந்தேன்; என்னைப் பாருங்கள்.
இனிமேல் என்னைக் குரங்கென
எவரும் கூற முடியுமோ?’

33