உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருடன் கண்டது?



திருடன் ஒருவன் இரவிலே
திருட எண்ணம் கொண்டனன்;
அருகில் உள்ள ஊரையே
அடைந்து திருடச் சென்றனன்.

வயலின் நடுவே வழியினில்
மனிதன் நிற்கக் கண்டனன்;
பயந்து அருகே நின்றனன்;
பதுங்கி மறைவில் ஒளிந்தனன்.

அந்த மனிதன் நடுவிலே
அசைந்தி டாமல் நிற்கவே,
‘எந்த வழியில் செல்வது ?’
என்றே எண்ணிப் பார்த்தனன்.

போக வழியும் இல்லையே !
பொறுமை பறந்து போனதே !
வேக மாகத் தடியுடன்
‘விறுவி’ றென்று சென்றனன்.

36