உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தடியால் அந்த மனிதனைத்
தலையில் ஓங்கி அடித்தனன்.
அடிமேல் அடியும் வைத்தனன்.
ஆனால், அந்த மனிதனோ-?

தாக்க வந்த திருடனைத்
தடுத்து விடவும் இல்லையே!
ஊக்க மாகத் திருப்பியே
உதைக்கத் தானும் இல்லையே!

‘குய்யோ! முறையோ !’ என்றுமே
குதித்து ஓட வில்லையே !
‘ஐயோ!' என்று அலறியே
அழவும் இல்லை, இல்லையே!

அடித்து, அடித்துக் கையுமே
அலுத்துப் போன திருடனும்,
தடித்த தோலை உடையவன்
தடியன் இவனும் யார்?’ எனக்

கிட்டச் சென்று வேகமாய்த்
தொட்டுப் பார்த்தான். பார்த்ததும்,
வெட்கப் பட்டுச் சிரித்தனன்.
விஷயம் என்ன, தெரியுமோ ?

37

2960-3