பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாயின் நன்றி



பணத்தில் மிக்க ஒருவரது
பையன் ஒருநாய் வளர்த்தனனே.
குணத்தில் மிக்கது அந்நாயும்.
குற்றம் எதுவும் செய்யாதாம்!

நாயைக் கண்டால் தந்தைக்கு
நஞ்சைக் கண்டது போலேயாம்.
வாயை விட்டுக் கோபமுடன்
வார்த்தை கூறி வைதிடுவார்.

“சோற்றுக் கில்லா நாளையிலே
சோறு போட்டு இந்நாயைப்
போற்று கின்றாய். உன்போலப்
புத்தி கெட்டவன் எவன் இருப்பான்”

என்றே தந்தையும் கூறிடுவார்.
என்னே செய்வான் பையனுமே.
நன்றி உள்ள அந்நாயோ
நகரா தங்கே இருந்ததுவே.

61