உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வண்டி நகர்ந்ததும் எங்களிடம்
வந்தார், ‘டிக்கெட்’ சோதகராம்.

‘எங்கே உனது டிக்கெட்டை
எடுப்பாய்’ என்றார் அம்மனிதர்.

உடனே, பைக்குள் கைவிட்டேன் ;
உள்ளே காணோம் டிக்கெட்டை !

‘ஐயோ!’ என்றேன் ; திடுக்கிட்டேன்.
அலசிப் பார்த்தேன் ; பயனில்லை !

‘பலகா ரத்தை வாங்கிடவே
பணத்தை விரைவாய் எடுக்கையிலே

டிக்கெட் கீழே வீழ்ந்திருக்கும்’
நினைத்தேன், இப்படி. அதற்குள்ளே,

‘ஏனோ தம்பி நடிக்கின்றாய் ?
என்னை ஏய்த்திட முடியாது !

எடுப்பாய் பணத்தை இருமடங்கு
இங்கே எதுவும் பலிக்காது!’

என்றார், அவரிடம் உண்மைதனை
எடுத்துக் கூறியும் பயனில்லை !

அத்தனை பேர்கள் மத்தியிலே
அவமானத்தால் தலைகுனிந்தேன்.

71