பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடியும் நேரம் நகர்அருகே
விரைந்தே அவைகள் செல்லுகையில்,
இடிஇடி யென்றே பெரும்சப்தம்
எழுந்தது காதும் அதிர்ந்திடவே !

சப்தம் கேட்டதும் மிருகமெலாம்
சட்டென நின்றன பயத்துடனே.
"எப்படி நாமும் வருவதனை
இந்த மனிதர்கள் அறிந்தனரோ ?

துப்பாக் கியினால், ஐயையோ,
சுடுகின் றார்கள் வருமுன்னே !
தப்பிப் பிழைக்க வேண்டுமெனில்,
சடுதியில் திரும்பி ஓடிடுவீர் !

உள்ளே சென்றால் ஆபத்து !
ஓடுவீர், ஓடுவீர்” என்றங்கே
குள்ள நரியும் நடுநடுங்கிக்
கூறிய வுடனே, மிருகமெலாம்

ஒட்டம் பிடித்தன காட்டிற்கே
ஒருநொடி கூட நில்லாமல் !
காட்டு மிருகம் அனைத்தையுமே
கலக்கிய சப்தம் அறிவீரோ ?


17