பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று கூற அதனைக் கேட்டே
இன்பம் கொண்ட வேணுவும்,
அன்றே குதிரைப் பந்தயத்தில்
ஆவலாகக் கலந்தனர்.

குதிரைப் பந்த யத்தில் அவரும்
கொஞ்சங் கொஞ்ச மாகவே,
அதிகப் பணத்தைஇழந்து மிகவும்
அல்லற் பட்டுத் திரும்பினார்.

திரும்பி அவரும் வந்த போது
திடுதிப் பென்று வேகமாய்,
அருகில் வந்த குதிரை வண்டி
அவரின் மீது மோதவே,

வலது கையும் முறிந்த தையோ!
வைத்தியர்கள் பார்த்துமே,
பலனே இல்லை; ஆத லாலே
பாவம்,நொண்டி யாயினார்!

'கஷ்டம் மிகவும் பட்டேன்,இந்தக்
கையொ டிந்த தால்' என
நஷ்ட ஈடு கோரி ரூபாய்
நான்கு நூறு பெற்றனர்.


612-4

53