பக்கம்:குழந்தை உலகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தாலாட்டு

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்” என்று ஒரு பழமொழி தமிழ்நாட்டில் வழங்குகிறது. புறக்கணிக்காமல் போற்றி இன்புறும் இடங்களில் குழந்தை கூத்தாடும்; தெய்வ ஸாந்நித்தியம் ஏற்படும். குழந்தைகளைக் கொண்டாடுவது ஒரு கலை. குழந்தையை வளர்த்து அறிவு புகட்டப் பெண்ணுலகம் கடமைப்பட்டிருக்கிறது. பிள்ளை உள்ளம் அறிந்த பெரியவர்கள் குழந்தை வளர்ப்பைப் பற்றி எத்தனேயோ நூல்களே எழுதியிருக்கிறார்கள்.

குழந்தையையும் தெய்வத்தையும் வசப்படுத்தப் பெரியோர்கள் கண்டுபிடித்த தந்திரங்களுள் பாட்டு ஒன்று. பக்தர்கள் எல்லாம் மனமுருகி ஆடிப் பாடி ஆண்டவனை வழிபட்டு இன்புறுகிறார்கள். தமிழ் இலக்கியத்தில் ஒரு பகுதி, இந்தப் பக்தர் குழாத்தின் உணர்ச்சி மிக்க பாடல்கள். மலரால் அருச்சனை செய்வதைக் காட்டிலும் பாட்டால் அருச்சனை செய்வதைக் கடவுள் மிகுதியாக விரும்புகிறாராம்.

கடவுள் பாட்டை விரும்புவதும் விரும்பாததும் எல்லோராலும் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயம் அல்ல. ஆனால் குழந்தை பாட்டிலே லயித்துப் போவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்”

என்று பாரதியார் ஒரு வடமொழிச் சுலோகத்தைத் தமிழ்ப்படுத்திச் சொல்கிறார். "காட்டு விலங்கும், கைக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/10&oldid=1046880" இலிருந்து மீள்விக்கப்பட்டது