பக்கம்:குழந்தை உலகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

குழந்தை உலகம்

 குழந்தையும் பாம்பும் பாட்டை அறிவதாவது!” என்று கேட்பவர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள். காட்டு விலங்கும் பாம்பும் பாட்டை அறிந்து இன்புறுவது ஒரு கால் தெரியாவிட்டாலும் நிச்சயமாகக் கைக் குழங்தை பாட்டிலே ஈடுபட்டுத் தூங்குவதை அவர்கள் அறிவார்கள்.

வேட்டை ஆடுபவர்கள் பாட்டுப் பாடிக்கொண்டு காட்டுக்குள்ளே செல்லுகிறார்கள், அவர்கள் பாட்டிலே மயங்கிச் சில மிருகங்கள் நின்ற இடத்திலே நிற்கின்றன. இடையர்கள் காடுகளுக்கு மாட்டை ஒட்டிச் செல்லுகின்றனர்; அவர்கள் புல்லாங்குழல் ஊதுகின்றனர்; தமக்குத் தெரிந்த பாடல்களையும் பாடுகின்றனர். அந்தப் பாட்டிலே மயங்கிப் பசுக்கள் அவர்களேச் சூழ்ந்து நிற்கின்றன. பாலைக் கறக்கும் போது கூடப் பாடுவார்கள் போலும்! “ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கவேனும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேணும்” என்ற பழமொழியிலிருந்து இந்த விஷயம் தெரிகிறது. பாம்பின் செய்தி என்ன ? மகுடியின் புன்னாகவராளியிலே மயங்கிப் போய்ப் பாம்பு படமெடுத்து ஆடுவதை நம் கண்களால் எத்தனை தடவை கண்டிருக்கிறோம்!

இவ்வாறு விலங்கினங்களே மயக்கும் சங்கீதம் பல காலம் பயிற்சி செய்து வரும் சங்கீதம் அல்ல. ஆரோகண அவரோகண ஸ்வரங்கள் தெரிந்த வித்துவான்களின் பாட்டல்ல. இடையனுக்குத் தெரியும் பாட்டு எந்தப் புலவனாலும் இயற்றப்பட்டதல்ல.அது நாடோடியாகப் பரம்பரை பரம்பரையாக வந்த பாட்டு. விலங்கைக் கவரும் இயற்கையான மோகன சக்தி அதற்கு இருக்கிறது. மகுடி ஊதும் பாம்புப் பிடாரன் எந்த வித்துவானிடம் புன்னாகவராளியைக் கற்றுக்கொண்டான்? நாலணாக் காசுக்குப் பாம்பு பிடிக்கும் அவன் பாட்டுத் தலமுறை தலைமுறையாக வந்தது; நாடோடியின் வாத்திய சங்கீதம்; பாம்புச் செவியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/11&oldid=1046884" இலிருந்து மீள்விக்கப்பட்டது